சென்னை: ஆவடி அருகே முக சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
