காங்கிரஸ்
கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான குலாம் நபி ஆசாத். ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர், மத்திய அமைச்சர், இந்திய காங்கிரஸ் கட்சியின் அரசிய விவகாரக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக பணி செய்து வருகிறது. அதேநேரத்தில் அரசியல் கட்சிகளும் தங்களது கட்சியின் பலத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு யூகங்களை கையாண்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் குலாம் நபி ஆசாத்துக்கு மிக நெருக்கமான விஹார் ரசூல் ஜம்மு-காஷ்மீரின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளார்.குலாம் நபி ஆசாத்தை பிரசாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
கட்சித் தலைமை அறிவித்த சில மணிநேரத்தில் தனது தலைவர் மற்றும் மாநில விவகாரக் குழு பொறுப்பில் இருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். இதனை பொதுவெளியில் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு, தலைமையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று கடிதம் எழுதிய 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பு வகித்த குலாம் நபி ஆசாத்திற்கு மாநிலங்களவை எம்.பி சீட் வழங்கப்படவில்லை இதனால் அதிருப்தியில் இருந்த குலாம் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.