இந்தியாவில் பருவமழை அதிகமாக இருந்தாலும் தேவையான பகுதியில் குறைவாகவும், தேவையில்லாத பகுதியில் கூடுதலாகவும் இருக்கிறது, இதனால் விவாச உற்பத்தி அளவு நாடு முழுவதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மோடி அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டீ கடையில் மாதம் 17 லட்சம் வருமானம்.. அசத்தும் விவசாயி மகன்..!

மத்திய அமைச்சரவை
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்களுக்கான 1.5 சதவீத வட்டி மானியத்தை விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

1.5 சதவீத வட்டி மானியம்
2022-23 முதல் 2024-25 நிதியாண்டுக்குப் பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கணினிமயமாக்கப்பட்ட பிஏசிஎஸ் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 1.5 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.

3 லட்சம் ரூபாய் வரை கடன்
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் 3 லட்சம் ரூபாய் வரை கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட 1.5 சதவீத வட்டி மானியத்திற்கு இந்தக் காலகட்டத்திற்கு மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ.34,856 கோடி பட்ஜெட் ஒதுக்கீடுகள் தேவைப்படும் அல்லது கூடுதல் சுமை உருவாகும்.

பணப்புழக்கம்
விவசாயிகளுக்கு அளிக்கப்படும் கடன்களுக்கு வட்டி மானியத்தை அதிகரிப்பதன் மூலம் விவசாயத் துறையில் பணப்புழக்கம் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் இத்துறையில் கடன் வழங்கும் நிறுவனங்களின் நிதி ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் என்று மத்திய அரசு கூறியது.

வேலைவாய்ப்பு
விவசாயிகளுக்குக் குறுகிய காலத்திற்குக் கடன் வழங்க ஊக்குவிக்கப்படுவதன் மூலம் கால்நடை வளர்ப்பு, பால் பண்ணை, கோழி வளர்ப்பு மற்றும் மீன் பிடி உள்ளிட்ட அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் குறுகிய கால விவசாயக் கடன்கள் வழங்கப்படுவதால், இந்தத் திட்டம் இத்துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுக்கும்.

4 சதவீத வட்டி
கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும்போது, விவசாயிகள் 4 சதவீத வட்டி விகிதத்தில் குறுகிய கால விவசாயக் கடனைப் பெறுவார்கள். கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விவசாயிகளுக்கு மலிவு விலையில் சிரமமின்றிக் கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
Modi Govt approves interest subvention of 1.5 percent on short term agri loan up to Rs 3 lakh
Modi Govt approves interest subvention of 1.5 percent on short term agri loan up to Rs 3 lakh மோடி அரசு அறிவிப்பால் விவசாயிகள் கொண்டாட்டம்..!