சென்னை:
பெங்களூருவில்
அவார்டு
வின்னிங்
இயக்குநர்
ஒருவர்
வாடகை
பைக்
ஓட்டுநராக
பணியாற்றும்
அவலம்
குறித்து
பயணி
ஒருவர்
தனது
ட்விட்டரில்
பதிவிட்டுள்ளார்.
கொரோனா
காலக்கட்டத்தில்
வேலையிழந்ததும்,
பின்னர்
பல
முறை
முயற்சி
செய்தும்
வருமானம்
இல்லாததால்
வேறு
வழியின்றி
ரேபிடோ
வாடகை
பைக்
ஓட்டுநராகியுள்ளார்
அவர்.
அவரது
நிலை
குறித்து
பயணி
பதிவிட்டதை
அடுத்து
அவருக்கு
உதவ
பீன்
பெங்களூரு
ஹேஷ்டேக்
ட்ரெண்டாகி
வருகிறது.
திரையுலகில்
கால்
பதிக்க
நினைத்த
இளைஞர்
திரையுலகில்
கால்பதிக்க
பலவித
கஷ்டங்களை
அனுபவித்து
பின்னர்
பெரிய
இடத்தைப்பெற்றவர்கள்
பலர்
உண்டு.
நல்ல
நிலையில்
இருந்து,
திறமையிருந்தும்
வாய்ப்பில்லாமல்
வறுமை
காரணமாக
திரையுலகை
விட்டு
ஒதுங்கியவர்கள்
பலர்
உள்ளனர்.
அதுபோன்ற
ஒருவரின்
கதைதான்
இது.
பெங்களூருவைச்
சேர்ந்தவர்
பராக்
ஜெயின்
இவர்
தனது
வேலை
நிமித்தமாக
அலுவலகம்
செல்ல
ரேபிடோ
பைக்
டாக்ஸியை
புக்
செய்தார்.
அவரை
பிக்கப்
செய்ய
வந்தவர்
அவரை
அழைத்துச்
செல்லும்
இடம்
பற்றி
கேட்டுள்ளார்.

ரேபிடோ
பைக்
டாக்சி
ஓட்டுநர்
பராக்
ஜெயின்
தான்
செல்லும்
இடம்
குறித்து
தெரிவித்துள்ளார்.
அப்போது
அந்த
ரேபிடோ
ஓட்டுநர்
பராக்
ஜெயினிடம்
“சார்,
நான்
இரண்டு
வருடங்களுக்கு
முன்பு
அதே
கட்டிடத்தில்
வேலை
செய்தேன்”
என்று
கூறியுள்ளார்.
இங்கேயா
2
ஆண்டுக்கு
முன்பா?
அப்புறம்
ஏன்
இப்ப
பைக்
டாக்சி
ஓட்டுகிறீர்கள்
எனக்கேட்டு
என்ன
வேலை
எனக்கேட்டுள்ளார்.
நான்
மினி
சீரிஸ்
இயக்குநர்,
எனது
சீரிஸுக்கு
ஃபிலிம்
ஃபெஸ்டிவெலில்
அவார்டும்
கிடைத்துள்ளது
என்று
கூறியுள்ளார்.

சீன
செயலி
கம்பெனியில்
பணி..கொரோனா
லாக்டவுன்
முடக்கிய
வாழ்க்கை
இதனால்
அதிர்ந்துப்போன
அவர்
பிறகு
ஏன்
ரேபிடோ
வாகன
ஓட்டுநராக
இருக்கிறீர்கள்
என்று
கேட்டுள்ளார்.
நான்,
செயலிகளை
உருவாக்கும்
ஒரு
சீன
நிறுவனத்தின்
ஆபரேஷன்
பிரிவில்
பணியாற்றினேன்,
ஆனால்
சீனா
ஆப்ஸ்
தடை
காரணமாக
கடந்த
மார்ச்
2020
இல்
எனது
வேலை
பறிபோனது,
அதன்
பின்னர்
கோவிட்
லாக்டவுன்
சூழ்நிலை
காரணமாக
என்னால்
வேறு
எந்த
வேலையையும்
தேட
முடியவில்லை.
திரைப்படங்களை
இயக்க
வேண்டும்
என்பது
எனது
நீண்ட
நாள்
ஆசை.
எனது
அனைத்து
சேமிப்புகளையும்
முதலீடு
செய்து
ஒரு
மினி-சீரிஸ்
உருவாக்கினேன்.

உலகின்
முதல்
ஒரு
நபர்
நடித்த
மினி
சீரீஸ்
தனி
ஒரு
நபராக
இயக்கிய
இந்தத்
மினி
சீரிஸ்
பெரும்
வரவேற்பைப்
பெற்றது.
15
வது
ஃபிலிம்
ஃபெஸ்டிவெலில்
வெற்றியும்
பெற்றது.
OTT
யில்
வெளியிட
ஆர்வமாக
வந்தனர்,
ஆனால்
சில
வணிக
சிக்கல்கள்
காரணமாக
எனது
மினி
சீரிஸ்
நிராகரிக்கப்பட்டது.
இந்தப்படத்தால்
எந்த
வருமானமும்
கிடைக்கவில்லை.
திரைப்பட
துறையில்
நுழைய
எடுத்த
அனைத்து
முயற்சிகளும்
தோல்வி.
வருமானம்
இல்லாமல்
கடந்த
2
ஆண்டுகளாக
வறுமை
நிலைக்கு
போய்விட்டேன்.
கையில்
பணமில்லை,
கடைசியாக
ராபிடோ
பைக்
டாக்சி
ஓட்டுநராக
பகுதி
நேரமாக
பணியாற்றி
வருகிறேன்.
இதில்
ஓரளவு
வருமானம்
வருகிறது,
ஆனால்
என்
தாயிடம்
ராபிடோ
ஓட்டுநராக
பணியாற்றுவதை
சொல்லவில்லை,
காரணம்
கவுரவமான
வேலையில்
இருந்த
மகன்
பைக்
டாக்சி
ஓட்டுநரா
என
அவர்
கவலைப்படுவார்
என
சொல்லவில்லை”
என்று
கூறியுள்ளார்.

யூடியூபில்
வெளியாகியுள்ள
VIK
மினி
சீரீஸ்
இப்பவும்
எனக்கு
யாராவது
வாய்ப்பளித்தாலோ,
அல்லது
அவர்கள்
வேலையில்
இணைத்துக்கொண்டாலோ
சந்தோஷமடைவேன்
என்று
கூறியுள்ளார்.
பராக்
ஜெயில்
லிங்கேதனில்
அவரது
விபரம்
குறித்து
தேடிய
போது
அவர்
பெயர்
நாகபூஷணம்
என்பதும்
அவர்
இயக்கிய
VIK
என்று
அழைக்கப்படும்
மினி
சீரிஸ்
பற்றியும்
அது
யூடியூபில்
இருக்கும்
லிங்கையும்
கண்டுள்ளார்.
இந்தப்படம்
உலகின்
முதல்
ஒரு
பாத்திரம்
கொண்ட
குறுந்தொடர்
அதுமட்டுமல்லாமல்
எந்த
குழுவினரும்
இல்லாமல்
நாகபூஷணம்
மட்டும்
தனியாக
தயாரித்த
படம்
என்பதை
அறிந்து
அதிர்ந்து
போனார்.
இது
தவிர
அவர்
இரண்டு
குறும்படங்களையும்
இயக்கியுள்ளார்.

வாய்ப்புள்ளவர்கள்
உதவ
ட்ரெண்டாகும்
ஹேஷ்டேக்
இந்தப்படம்
15
வது
ஃபிலிம்
ஃபெஸ்டிவெலில்
விருதையும்
பெரும்
பாராட்டையும்
பெற்றதை
அறிந்தார்.
இதுபற்றி
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
வெளியிட்டுள்ள
பராக்
ஜெயின்
மினி
தொடர்
இயக்குநர்
நாகபூஷணத்துக்கு
உதவுபவர்கள்
உதவலாம்,
அவரை
கேமரா
போன்ற
பணிக்காக
பயன்படுத்தவேண்டும்
என்றால்
இணைத்துக்கொள்ளலாம்
என
பதிவிட்டுள்ளார்.
அதை
பார்த்த
நெட்டிசன்கள்
Peakbengaluru
ஹேஷ்டாக்
தளத்தில்
அதை
ட்ரெண்டாக்கி
வருகின்றனர்.
ஒரு
மிகப்பெரிய
திறமைசாலி
வாய்ப்பின்றி
பெங்களூரு
சாலையில்
பைக்
டாக்ஸி
ஓட்டி
பிழைத்து
வருகிறார்.
வாய்ப்புள்ளவர்கள்
அவருக்கு
உதவினால்
இந்த
செய்திக்கு
அர்த்தமிருக்கும்.