மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் இளம் ஹீரோவாக வலம் வருகிறார்.
அமீர்கானின் லால் சிங் சத்தா மற்றும் அக்ஷய் குமாரின் ரக்ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்த நிலையில், அர்ஜுன் கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பொங்கி எழுந்துள்ளார்.
அதன் விளைவாக #ArjunKapoor மற்றும் #BoycottbollywoodForever உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை மீண்டும் பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
அர்ஜுன் கபூர்
மூத்த கவர்ச்சி நடிகை காதலித்து ஏகப்பட்ட சிக்கலில் சிக்கி வரும் இளம் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மீது ஏற்கனவே நெப்போடிசம், போதைப் பொருள் பார்ட்டி உள்ளிட்ட பல பிரச்சனைகள் வலம் வரும் நிலையில், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனது கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் பதிவிட்டுள்ளார் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர்.
அடங்கி போகக் கூடாது
பாய்காட் பாலிவுட் போன்ற ஹாஷ்டேக்குகள் ரசிகர்களால் உருவாக்கப்படவில்லை என்றும், அதற்கு பின்னணியில் ஒரு உள்நோக்கம் இருப்பதாகவும், இதுவரை அடங்கி போனதே நாம் செய்த பெரிய தவறு என சமீபத்தில் அளித்த பேட்டியில் அர்ஜுன் கபூர் ஆவேசமடைந்து பேசியுள்ளார்.
ஒன்று சேர்ந்து
இந்த பிரச்சனையால் பாலிவுட்டே பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பிறகு எப்போது தியேட்டர்கள் திறக்கும் என காத்திருந்த சினிமா துறையினர், தற்போது எப்போது இந்த பாய்காட் பாலிவுட் டிரெண்ட் முடிவுக்கு வரும் என்கிற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என அர்ஜுன் கபூர் பேசி உள்ளார்.
இதுதான் ஒரே வழி
தொடர்ந்து பாலிவுட்டில் இருந்து நல்ல படங்களை கொடுத்தால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்றும், ரசிகர்கள் எதை நினைத்து நம்மை ஒதுக்க நினைக்கிறார்களோ அந்த பிரச்சனை ஜோடிக்கப்பட்ட ஒன்று என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என கொதித்தெழுந்துள்ளார். மேலும், நெகட்டிவிட்டியை நல்ல படங்கள் மூலம் நசுக்க வேண்டும் என விஜய் பேசிய வசனத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் போஸ்ட் செய்துள்ளார்.
வான்டட்டா வந்து
அர்ஜுன் கபூரின் பேச்சு பாய்காட் கேங்கை கோபப்படுத்தி உள்ளது. #ArjunKapoor மற்றும் #BoycottbollywoodForever உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை போட்டு, படமே எடுக்க வேண்டாம் நாங்க பாய்காட்டே பண்ண மாட்டோம். எடுப்பதெல்லாம் ரீமேக் படங்கள் மற்றும் இந்து மக்களுக்கு எதிரான படங்கள். ஓடிடி வந்த உடனே தியேட்டரை மறந்து விட்டு ஓடின ஆட்கள் தானே நீங்கள், அதன் விளைவு தற்போது மக்கள் வீட்டில் இருந்தே படத்தை பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும், தியேட்டருக்கு வந்து பார்க்கும் அளவுக்கு சூப்பரான படத்தையும் பாலிவுட் கொடுக்கத் தவறி விட்டது என இனி அர்ஜுன் கபூர் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என டிரெண்ட் செய்து வருகின்றனர்.
பெரிய சிக்கல்
அர்ஜுன் கபூரின் இந்த ஆவேச பேச்சுக் காரணமாக அடுத்தடுத்து பாலிவுட்டில் வெளியாக உள்ள படங்களையும் ஒன்றாக சேர்ந்து புறக்கணிக்க வேண்டும் என ரசிகர்கள் மீண்டும் பாய்காட் டிரெண்டிங்கை ஆரம்பித்துள்ளனர். மேலும், சிலர், வார்த்தையால் சொல்லாமல் நல்ல படங்களை எடுத்துக் காட்டுங்கள், பின்னர் இந்த பிரச்சனை தானாகவே சரியாகி விடும் என்றும், ரசிகர்களை அவமதித்ததன் விளைவை தான் பாலிவுட் அனுபவித்து வருகிறது என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.