விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா உள்பட பலர் நடித்து வரும் படம் வாரிசு. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

வாரிசு படப்பிடிப்பு முழு செக்யூரிட்டியுடன் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் நேற்று வாரிசு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதன் காரணமாக படக்குழு பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் யாரும் இனிமேல் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வாரிசு படம் திரைக்கு வருவது வரை எந்த ஒரு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியில் கசியக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.