நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக, தொடர்ந்து அட்ரிஷன் விகிதத்தினால் மோசமான தாக்கத்தினை எதிர்கொண்டு வருகின்றது.
இதற்கிடையில் அட்ரிஷன் விகிதத்தினை கட்டுக்குள் வைக்க ஊழியர்களுக்கு, காலாண்டுக்கு ஒரு முறை சம்பள அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு என சமீபத்தில் அறிவித்தது.
இது செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த சம்பள விகிதம் எப்படி இருக்கும் என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
விப்ரோவின் கருத்து
இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், விப்ரோவின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான முந்தைய அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் வெற்றிகரமாக முதல் காலாண்டினை முடித்துள்ளோம். எனினும் மாறக்கூடிய ஊதியத்தின் அளவு குறித்து எங்களிடம் எந்த கருத்தும் இல்லை என மெயிலில் (Mint அறிக்கையின் படி) தெரிவித்துள்ளது.

மார்ஜினில் தாக்கம்
மறுபுறம் மற்றொரு அறிக்கையில் விப்ரோவின் வேரியபிள் பே காரணமாக மார்ஜின் அழுத்தம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 18.8% ஆக இருந்த மார்ஜின் விகிதம், நடப்பு ஆண்டில் 15% ஆக குறைந்துள்ளது.
கொரோனாவின் வருகைக்கு பிறகு விப்ரோவில் பணியமர்த்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த காலகட்டத்தில் நிறுவனம் அட்ரிஷன் பிரச்சனையையும் எதிர்கொண்டது.

முந்தைய திட்டம்
அட்ரிஷன் விகிதத்தினை குறைக்கவும், ஊழியர்களை தக்கவைத்து கொள்ளவும், ஒவ்வொரு காலாண்டிலும் பதவி உயர்வை வழங்க உள்ளதாக அறிவித்தது. இதன் படி செப்டம்பரில் பெரும்பாலான ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வை வழங்க திட்டமிட்மிட்டுள்ளதாகவும், சிறப்பான செயல்திறனை காட்டுபவர்களுக்கு 15% மேலாகவும் சம்பள உயர்வினை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தது.

ஊழியர்கள் ஹேப்பி
விப்ரோவின் இந்த சம்பள அறிவிப்பானது நடுத்தர நிர்வாகம் வரையில் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டது. மொத்தத்தி விப்ரோ ஊழியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு என்றே கூறலாம்.

அச்சம்
எனினும் மறுபுறம் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து ஐடி துறையின் வளர்ச்சி விகிதமானது இப்படியே சாதகமாக இருந்து வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதேபோல சம்பள அதிகரிப்பானது தொடர்ந்து இருக்குமா? அப்படியானால் நிறுவனத்தின் மார்ஜின் விகிதம் எப்படி இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
There is no change in Wipro salary increment plan
There is no change in Wipro salary increment plan/விப்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்.. ஊழியர்கள் செம ஹேப்பி!