புதுடில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறியதாவது: 3லட்சம் வரையிலான குறுகிய கால விவசாயக் கடன்களுக்கு 1.5% வட்டி மானியம் வழங்கப்படும். ரிசர்வ் வங்கி வட்டி விதங்களை அதிகரித்துள்ளது. எனவே இந்த ஆண்டு வட்டிக்கு மானியம் வழங்கப்படும்.
விவசாயத்துறையில் அதிகளவு கடன் தரும் நோக்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், கால்நடை விவசாயிகளுக்கும் இந்த மானியம் கிடைக்கும். விவசாயிகளுக்கு வட்டி மானியத்துக்கு ரூ.34,856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகையான மானியங்களும் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதுடில்லி: விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறியதாவது: 3லட்சம் வரையிலான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்