ஸ்பெயினில் கட்டுக்கடங்காமல் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
வலென்சியா பிராந்தியத்தில் உள்ள வால் டி”எபோ பகுதியில் திடீரென மின்னல் தாக்கி காட்டுத்தீ பற்றியது.
23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து ஆயிரத்து 500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து தீ பரவி வருவதால் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.