10 சதங்கள், 3000 ஓட்டங்கள்! மிரட்டலான சாதனை படைத்த வீரர்


கலம் மெக்லியோட் 88 போட்டிகளில் 3026 ஓட்டங்கள் எடுத்துள்ளார்


33 வயதாகும் கலம் மெக்லியோட் 10 சதம் மற்றும் 13 அரைசதங்களில் ஒருநாள் போட்டிகளில் விளாசியுள்ளார்

ஸ்காட்லாந்து அணி வீரர் மெக்லியோட் ஒருநாள் போட்டிகளில் 10 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 249 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Calum MacLeod

PC: Twitter

அதிகபட்சமாக கலம் மெக்லியோட் 144 பந்துகளில் 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 133 ஓட்டங்கள் விளாசினார்.

இது அவருக்கு ஒருநாள் போட்டிகளில் 10வது சதம் ஆகும்.

இதன்மூலம் 10 சதங்கள் அடித்த முதல் ஸ்காட்லாந்து வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அத்துடன் அவர் 3000 ஓட்டங்களை கடந்த இரண்டாவது ஸ்காட்லாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக, கோட்ஸர் 82 போட்டிகளில் 3051 ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.      

Calum MacLeod

PC: Twitter



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.