உலக நாடுகள் பலவும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு வர பல நாடுகளும் வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்தின் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக உச்சம் தொட்டுள்ளது.
இது நுகர்வோர் மத்தியில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் இங்கிலாந்து வங்கிக்கு அழுத்தத்தினை அதிகரித்துள்ளது.
நுகர்வோர் விலை குறியீடானது ஜூலை மாதத்தில் 10.1% ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் தேசியல் புள்ளியல் தரவு தெரிவித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 9.4% ஆகவே இருந்தது.
என்ன காரணம்?
இது நிபுணர்கள் எதிர்பார்த்த விகிதத்தினை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்ந்து உணவு பொருட்கள் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணியாக அமைந்துள்ளது. அதோடு எனர்ஜிக்கள் விலையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பவுண்ட்டின் மதிப்பும் ஏற்றம் கண்டுள்ளது.

என்னென்ன பொருட்கள் விலையேற்றம்
உணவு பொருட்கள் விலையில் குறிப்பாக பேக்கரி பொருட்கள், பால் பொருட்கள், இறைச்சிகள், காய்கறிகள் என பலவற்றின் விலையும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளன. இது தவிர பெட் உணவுகள், டாய்லெட் பேப்பர்கள், டூத்பிரஷ், மற்றும் டியோட்ரண்டுகள் என பலவும் ஜூலை மாத பணவீக்க ஏற்றத்திற்கு முக்கிய காரணமாகும்.

இன்னும் அதிகரிக்கும்
மேலும் மக்களின் வாழ்வாதார செலவினங்கள் அதிகரித்துள்ளன. அதே நேரம் ஊழியர்களுக்கான சம்பள விகிதம் குறைந்துள்ளது. இன்னும் எரிசக்தி விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் இனி வரும் மாதங்களில் பணவீக்கம் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் 13% மேலாக இருக்கலாம் என்றும் பேங்க் ஆப் இங்கிலாந்து எதிர்பார்க்கிறது.

வட்டி அதிகரிப்பு இருக்கலாம்
இப்படி பல நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இங்கிலாந்தின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகளை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் மற்றொரு 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பும் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரெசசன் வரலாம்
இதற்கிடையில் பேங்க் ஆப் இங்கிலாந்து 4வது காலாண்டில் ரெசசன் வரலாம் என தெரிவித்துள்ளது. இது 2024ம் ஆண்டின் இறுதியில் முடிவினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியில் பணவீக்கம் 13% மேலாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எரிபொருள்களுக்கான பில் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் நிலை?
இங்கிலாந்தின் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பணவீக்க விகிதம் பரவாயில்லை எனலாம். ஏனெனில் இன்று வரையில் 7% கீழாகவே இருந்து வருகின்றது.
UK inflation rate hits double digits for the first time in 40 years
UK inflation rate hits double digits for the first time in 40 years/40 வருடத்தில் முதல் முறையாக நடந்த மோசமான சம்பவம்.. இங்கிலாந்து மக்கள் பாவம்.. இந்தியா நிலை பெட்டர்!