’45 கி.மீ.க்கு ரூ.3000 கட்டணமா?’.. உபர் சேவையால் புலம்பும் நொய்டா வாடிக்கையாளர்!

விமான நிலையத்திலிருந்து வீடு வரை 45 கிலோமீட்டர் செல்வதற்கு உபர் நிறுவனம் ரூ.3,000 கட்டணம் வசூலித்ததாக நொய்டாவை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நொய்டாவை சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு செல்ல உபர் காரை பயன்படுத்தினார். அவர் வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வெறும் 45 கிலோமீட்டர் மட்டுமே என்று இருக்கும் நிலையில் ரசீதில் 147.39 கிலோ மீட்டர் பயணம் செய்ததாக பதிவு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் ரூபாய் 2,935 என காட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து வேறு வழியின்றி அந்த பணத்தை தான் கட்டியதாகவும் 45 கிலோமீட்டருக்கு கிட்டத்தட்ட 3,000 ரூபாய் என்பது மிகவும் மோசமான ஒரு கட்டணம் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

image
இதுகுறித்து உபர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உபர் நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் அதே நேரத்தில் தான் புகார் அளித்து 10 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் எந்த விதமான பதிலும் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நொய்டாவாசியின் பதிவு வேகமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சூழலில், உபர் நிறுவனம் விரைவில் இதற்கு தீர்வு காண வேண்டுமென்று பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க: இலங்கையில் முடிவுக்கு வருகிறது அவசரநிலை பிரகடனம் – அதிபர் ரணில் விக்கிரமசிங்க தகவல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.