மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் எடுக்கப்படும் ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் தற்போதுள்ள கட்டணத்தில் ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள், தங்கள் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பணம் எடுத்து கொள்ளலாம் என பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் அறிவித்துள்ளன. அதற்குமேல் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதற்கான கூடுதல் கட்டணமாக ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் இருபது ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.
தற்போது ஏ.டி.எம். மையங்களின் பராமரிப்பு மற்றும் அதனை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்து உள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. எனவே ஏ.டி.எம். மையங்களில் கூடுதல் பரிவர்த்தனைக்கான கட்டணமாக தற்போது வசூலிக்கப்பட்டு வரும் இருபது ரூபாய் கட்டணத்துடன் கூடுதலாக ஒரு ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 21 ரூபாய் வசூலிக்கும் புதிய கட்டண நடைமுறை இன்று முதல் (17.08.2022) அமலுக்கு வந்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM