கொர்பா: ஆறு என்ஜின்கள், 295 பெட்டிகளுடன் சுமார் 27 ஆயிரம் டன் நிலக்கரியுடன் இந்தியாவின் நீளமான சரக்கு ரயிலின் வெள்ளோட்டம் நடத்தி இந்திய ரயில்வே அசத்தி உள்ளது.
சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரயில் இந்திய ரயில்வேயின் அங்கமாக உள்ளது. இந்த சரக்கு ரயில் தான் இந்தியாவிலேயே நீளமான சரக்கு ரயில் என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆம், இதன் நீளம், கொஞ்சநஞ்சமல்ல 3.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு செல்கிறது. நாட்டின் 75வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி இந்த ரயிலின் வெள்ளோட்டத்தை தென்கிழக்கு ரயில்வே நடத்தி அசத்தி உள்ளது.
சோதனை ஓட்டத்தின்போது, 6 என்ஜின்களுடன் கூடிய இந்த சரக்கு ரயில், 295 பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டு, சத்தீஷ்கார் மாநிலம், கொர்பாவில் இருந்து நாக்பூரின் ராஜ்நந்த்காவ் வரை சென்றுள்ளது. மொத்தம் 267 கி.மீ தொலைவை இந்த ரயில், 11.20 மணி நேரத்தில் கடந்தது. இந்த சூப்பர் வாசுகி சரக்கு ரயிலில் ஏற்றப்படுகிற நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement