கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் விலை குறைந்துள்ளது.
இது தேவை குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அதன் காரணமாக விலை அழுத்தத்தில் காணப்படுகின்றது.
சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சியினை காணலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ரெசசன் அச்சம்
பல நாடுகளில் இதன் காரணமாக ரெசசன் வரலாமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் குறையத் தொடங்கியுள்ளது. அக்டோபர் மாத கான்ட்ராக்டில் விலை பேரலுக்கு 91.58 டாலராக குறைந்துள்ளது. இன்று மதியம் 91.85 டாலர்கள் என்ற நிலையில் காணப்பட்டது.
தற்போதைய நிலவரம்?
தற்போது 6.50 மணி நிலவரப்படி 92.55 டாலராக சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இதே டபள்யூ டி ஐ கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 87.09 டாலராக காணப்படுகிறது.
அமெரிக்க ஈரான் இடையேயான பிரச்சனை சுமூக நிலையை எட்டி வரும் நிலையில், இது மேற்கொண்டு விலையை குறைக்க வழிவகுக்கலாம். இது கச்சா எண்ணெய் சப்ளையை அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு விலையினை குறைக்க வழிவகுக்கலாம்.
விலை குறைய முக்கிய காரணம்
சீனாவில் கொரோனாவின் தாக்கம் அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாகவே இருந்து வரும் நிலையில், அங்கும் தேவை குறையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது கச்சா எண்ணெய் தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது பல மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டு வருகின்றது.
இருப்பு குறைவாக இருந்தால்?
எப்படியிருப்பினும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் குறித்தான தரவில்,இருப்பு குறைவாக இருந்தால் அது விலையினை ஊக்குவிக்கலாம். ஆக இது விலையில் சற்று தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என கமாடிட்டி தரகு நிபுணர்கள் கூறுகின்றனர். இது இன்று இரவு வெளியாகவுள்ள நிலையில் விலையில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
விலையில் தாக்கம்
அமெரிக்கா சீனாவின் பொருளாதாரம் மெதுவான வளர்ச்சியினை கண்டு வரும் நிலையில், அது தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். ஆக வரவிருக்கும் நாட்களில் வெளியாகவுள்ள தரவுகளும் கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
சர்வதேச சந்தையில் விலை குறைந்து வரும் நிலையில், அது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்துமா? என்ற பெருத்த எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியுள்ளது.
Brent crude oil price hits fresh 6 month low amid slowdown worries
Brent crude oil price hits fresh 6 month low amid slowdown worries Brent crude oil price hits fresh 6 month low amid slowdown worries/6 மாத சரிவில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை.. பெட்ரோல் , டீசல் விலை குறையுமா?