
75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படம் நேற்றோடு 75 நாட்களை நிறைவடைந்துள்ளது. இந்த படத்தில் கமலுடம் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், செம்பன் வினோத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்தப் படம் உலகம் முழுவதும் ஐந்தாயிரம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. முக்கியமாக இப்படத்தின் கதையில் இடம் பெற்றிருந்த சஸ்பென்ஸ் மற்றும் டுவிஸ்ட் காரணமாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவை பெற்றது. அதோடு இப்படத்தில் ரோலக்ஸ் என்ற வேடத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே வந்து நடித்த சூர்யாவின் கேரக்டர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் நேற்றோடு விக்ரம் படம் 75 நாட்களை நிறைவு செய்திருக்கிறது. அந்த வகையில் 140 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் படம் இதுவரை 500 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.