வீட்டில் பெரும்பான்மையான நேரம் செயல்பட்டுக்கொண்டே இருக்கும் ஒரு சாதனம் என்றால், அது கேஸ் அடுப்பு. எனில், அதன் பராமரிப்பும் அதற்கு ஈடுகொடுத்து இருக்க வேண்டியது மிக அவசியம்.
மேற்பகுதி மட்டுமில்லாமல் கேஸ் அடுப்பின் ஒவ்வொரு பகுதியையும் சரியான முறையில் சுத்தப்படுத்துவது மிக முக்கியம். எப்படி அதனை சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம்.
சுத்தம் செய்ய தேவையான பொருட்கள்
– வினிகர்
– டிஷ்சோப்
– ஸ்க்ரப் செய்வதற்கு ப்ரெஸ்
– பழைய துணி அல்லது பேப்பர்
– வெந்நீர்
வழிமுறைகள்
– முதலில் அடுப்பிற்கு வரும் கேஸ் இணைப்பை அணைத்து வைக்கவும்.
– அடுத்ததாக அடுப்பில் உள்ள பாத்திரம் வைக்கும் பிளேட்களை தனியாக எடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் வெந்நீர் நிரப்பி அதில் போட்டு வைக்கவும்.
– தொடர்ந்து அடுப்பின் பர்னர் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய பகுதியாகும். இதனையும் தனியாக எடுத்து வெந்நீரில் போட்டு வைக்கவும்.
– இவை இரண்டும் ஊறும் நேரத்தில் அடுப்பின் மேல்பகுதியை சுத்தம் செய்துவிடலாம். அதற்கு 1:1 என்ற விகிதத்தில் வினிகர் மற்றும் நீர் கலந்து அடுப்பின் மேற் பகுதியில் அதனின் பின்புறமும் ஸ்ப்ரே செய்து வைக்கவும். இந்த ஸ்ப்ரே செய்து 1 முதல் 2 நிமிடங்கள் வரை ஊற விடவும்.
– 2 நிமிடத்திற்கு பின் அடுப்பை துணி கொண்டு துடைத்து எடுக்கவும், இதனால் அடுப்பில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கிவிடும். அதனையும் மீறி கறை இருந்தால் பிரஷ்ஷில் சோப் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவவும், இதே செய்முறையை அடுப்பின் பின்புறமும், அடுப்பு சுவிட்ச் பகுதியிலும் செய்யவும். இதன்மூலம் அடுப்பு முழிவதும் கறைகள் அற்று காணப்படும்,
– தொடர்ந்து அடுப்பை சுத்தம் செய்த பின் பிளேட் மற்றும் பர்னரை சுத்தம் செய்யவும், சோப்பு நீரை கொண்டு ப்ரெஷ் மூலம் இவற்றையும் நன்றாக தேய்த்து சுத்தம் செய்யவும். பர்னரை சுத்தம் செய்யும்போது ஓட்டையில் அடைந்திருப்பதை ஊசி கொண்டோ அல்லது சேப்டி பின் கொண்டோ நீக்கிவிட வேண்டும்.
– அனைத்தையும் சுத்தப்படுத்திய பின் பர்னர் மற்றும் பிளேட்டை மறுபடியும் அடுப்பில் வைப்பதற்கு முன் சரியாக உள்ளதா, தூசி ஏதும் இல்லாமல் இருக்கிறதா எனபதை எல்லாம் சரி பார்த்தபின் அடுப்பில் மீண்டும் வைக்கவும்.