2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்கள் வட்டி 1527 சதவீதம் அதிகரித்துள்ளது என அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் அஞ்சலகங்களில் மூத்த குடிமக்களுக்கான சிறுசேமிப்பு திட்டங்கள் ரூ.1997.9 கோடியில் இருந்து 2022இல் ரூ.32507.87 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்த திட்டங்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் இதனை சரியாக பயன்படுத்தினால் மாத வருமானம் பெற முடியும்.
தற்போது இந்தத் திட்டத்தில் 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இது வங்கிகள் மற்றும் இதர அஞ்சல சேமிப்பு திட்டங்களைவிட சிறந்த வட்டியாகும்.
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் காலாண்டு பணம் பெறலாம். தற்போதைய வட்டி விகிதமான 7.4% ஆண்டுக்கு, ஒரு காலாண்டுக்கு ரூ.10,000 வைப்புத் தொகையில் ரூ.185 பெறலாம்.
தபால் அலுவலக இணையதளத்தின்படி, வட்டியானது முதல் முறையாக மார்ச் 31/30 செப்டம்பர்/டிசம்பர் 31 ஆம் தேதி முதல் டெபாசிட் செய்யப்பட்ட தேதியிலிருந்தும், அதன்பிறகு மார்ச் 31, 30 ஜூன், 30 செப்டம்பர் மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளிலும் செலுத்தப்படும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்சம் ரூ.1000 முதல் ரூ.15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். வரி விலக்கு உண்டு. இந்தத் திட்டத்தில் கடந்த 2013-14 வரையிலான காலகட்டத்தில் ரூ.1997.90 கோடி முதலீடு செய்யப்பட்டது.
தொடர்ந்து மற்ற வருடங்களில் செய்யப்பட்ட மொத்த டெபாசிட் தொகை வருமாறு:-
2014-15 ரூ.3,007.05
2015-16 ரூ.12,155.19
2016-17 ரூ.10,001.18
2017-18 ரூ.16,457.86
2018-19 ரூ.19,320.31
2019-20 ரூ.24,595.54
2020-21 ரூ.29,136.59
2021-22 ரூ.32,507.89
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil