Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர்
டெல்லி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார். 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கிறார் ஸ்டாலின். முன்னதாக குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்.
நான்காம் கட்ட க்யூட் தேர்வு தொடக்கம்
மத்திய பல்கலைக் கழகங்களின் மாணவர் சேர்க்கைக்கான நான்காம் கட்ட க்யூட் தேர்வு இன்று தொடக்கம். நாடு முழுவதும் 3 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.17 லட்சம் மதிப்பிலான சாக்லேட்டுகள் திருடப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“அண்டை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனிக்கிறோம்” என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.
இலங்கை ஹம்மந்தோட்டா துறைமுகத்தில் சீன உளவுக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஜெய்சங்கர் இவ்வாறு கூறியுள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு சிறுதானியங்களை பரிசாக வழங்கினார்.
சுதந்திர வீரர்களுடன் கோட்சே படமும் இடம்பெற்றிருந்தது கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் 67ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளர். இந்தப் படம் முழு ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் தீம் பாடல் தவிர மற்ற பாடல்கள் இடம்பெறாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளுக்கு வட்டி மானியம் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி மீனவர்கள் மற்றும் கால்நடை விவசாயிகள் வட்டி மானியம் பெறலாம். இந்த வட்டி மானியத்துக்காக ரூ.34856 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி உடனான முதல்வர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் நன்றி தெரிவித்தார். மேலும், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் முன்வைத்தார்
டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். குடியரசு தலைவர், குடியரசு துணைத்தலைவரை தொடர்ந்து பிரதமரைச் சந்தித்து வருகின்றார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கடந்த 13ம் தேதி பாஜக கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி அவமதித்த விவகாரத்தில், பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளர் ரகுபதி கைது செய்யப்பட்டுள்ளார்
டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்திப்பதற்காக புறப்பட்டார்
பாரதிய ஜனதாவின் மத்திய தேர்தல் குழு உறுப்பினராக மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் நியமனம் செய்யபட்டுள்ளார்
மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில், கனியாமூர் தனியார் பள்ளி மீது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கட்டடங்களில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிய புகாரை வழக்காக தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது
உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து நாங்கள் நடப்போம். அதிமுக ஒரே தரப்பு தான்; இருதரப்பு என்பதே கிடையாது. அனைவரையும் அரவணைத்து செல்வது தான் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்பு. அதிமுகவின் கொள்கைக்கு இசைந்து வருபவர்கள் இணைத்து கொள்ளப்படுவார்கள்- சென்னை மெரினாவில் ஒபிஎஸ் பேட்டி
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக, 10 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், சென்னை, மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். ஒற்றுமை நிலைநிறுத்தப்பட்டு அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக திகழும் – ஓபிஎஸ் அறிக்கை
கட்சியை சட்டத்திற்கு புறம்பாக அபகரிக்க முடியாது. உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமார நம்பிய தமிழ்நாட்டு மக்களை நம்பினேன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரை நம்பினேன். நம்பிக்கை இன்று உண்மையாகி இருக்கிறது என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைதான கனல் கண்ணன், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் இடையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பொதுக்குழுவுக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்பால் எந்த பின்னடைவும் இல்லை. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஈபிஎஸ்க்கு ஆதரவு அளித்துள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடத்தியதை போலவே இரண்டு பொதுக்குழுக்களும் முறையாக நடத்தப்பட்டது – கே.பி.முனுசாமி
உயர் நீதிமன்ற தீர்ப்பு நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்பதை உறுதி செய்துள்ளது- ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்
ஓபிஎஸ் – க்கு ஆதரவு நிலை என்பது கிடையாது, 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் உடனான சந்திப்பு மன நிறைவாக அமைந்தது – முதலவர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு நேரில் நன்றி தெரிவிக்கவுள்ளேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஓபிஎஸ் – க்கு ஆதரவு நிலை என்பது கிடையாது, 90 சதவீத கட்சியினர் ஒற்றைத் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளனர். தீர்ப்பு நகல் வந்தபின் சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து கட்சிதான் முடிவு செய்யும் என ஜெயக்குமார் பேட்டியளித்தார்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்கள் உடன் இபிஎஸ் ஆலோசனை
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் கிடையாது. இணை ஒருங்கிணைப்பாளராகவே தொடருவார்- நீதிமன்றம்
உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடம் செல்ல இருக்கிறார்.
ஜூன் 23க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சேலம்: ஆத்தூர் அருகே வீரகனூரில் தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் பவனிகாஸ்ரீ என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்குகளில் இன்னும் சற்றுநேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ரத்தன் பஜார், பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்
நோட்டீஸ் வழங்கிய பிறகும் நீண்ட காலமாக வாடகை செலுத்தாததால் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை. ரூ.40 லட்சம் நிலுவையில் உள்ளதாகத் தகவல்
தமிழக-கேரள எல்லையான ஆனைகட்டி பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள யானையை 2வது நாளாக ட்ரோன் மூலம் தேடி வரும் வனத்துறையினர்
மருத்துவர்கள் உட்பட 70 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
யானையை கண்டுபிடித்தவுடன் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வனத்துறையினர் உள்ளனர்.
இங்கிலாந்தின் பிரபலமான மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலன் மஸ்க் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா: கோண்டியாவில் சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் மோதி விபத்து
3 பெட்டிகள் தடம்புரண்டதில் 50 பயணிகள் படுகாயம்.