Tirupati: அக்டோபர் சிறப்பு தரிசன டிக்கெட் – ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ளது, திருப்பதி
ஏழுமலையான் கோவில்
. இந்தக் கோவில், உலகப் பிரசித்திப் பெற்றது. இக்கோவிலுக்கு, உள்ளூரில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்துச் செல்வர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை அடுத்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் 300 ரூபாய் தரிசன கட்டண டிக்கெட்ட மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசனம் டிக்கெட்கள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழாவை காண நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த 2 ஆண்டுகளாக பிரம்மோற்சவ விழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்த ஆண்டு கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் பிரமோற்சவ விழா நாட்களில் இலவச தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே, அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 300 ரூபாய் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படாது. தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வழியில் 26 நாட்களுக்கான 5 லட்சத்து 20 ஆயிரம் டிக்கெட்டுகள் நாளை காலை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.