அமெரிக்கப் பயணம் என்பது பலருக்குக் கனவு வேலைக்காக, சிலருக்கு பேரன் பேத்தியை பல வருடங்களுக்குப் பின்பு பார்ப்பதும், இன்னும் சிலருக்கு சுற்றுலா.
இப்படி அமெரிக்கா செல்ல திட்டமிடும் அனைவருக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது விசா, ஆனால் இந்த விசா பெற தற்போது 1.5 வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் முக்கியமான விஷயமாக உள்ளது.
இந்தியா அந்த தவறை செய்கிறது.. எச்சரிக்கும் அமெரிக்கா.. ஏன்?

அமெரிக்கா
அமெரிக்காவிற்குச் செல்ல விசிட்டர் விசா விண்ணப்பிக்கத் திட்டமிடும் மக்கள் முன்னெப்போதும் இல்லாத நீண்ட காத்திருப்புக் காலம் இருக்கும் காரணத்தால் அதிர்ச்சியில் உள்ளனர். அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மெண்ட் இணையதளத் தரவுகள் படி இந்தியாவில் விசிட்டர் விசா பெற சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் காத்திருப்புக் காலம் இருப்பதாகக் காட்டுகிறது, அதாவது இப்போது விண்ணப்பிக்கத் திட்டமிடுபவர்கள் மார்ச்-ஏப்ரல் 2024க்கான விசா பெறுவதற்கான விசா இண்டர்வியூவ் டேட் பெறலாம்.

கனடா, பிரிட்டன்
முன்னணி டிராவல் ஏஜெண்ட்கள் கூறுகையில் அமெரிக்கா மட்டும் அல்லாமல் பல நாடுகள் விசா விண்ணப்பங்கள் மற்றும் செயலாக்கம் செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர். இதில் முக்கியமாக ஷெங்கன் ஸ்டேட்ஸ், கனடா மற்றும் பிரிட்டன் ஆகியவையும் அடங்கும்.

ஐரோப்பிய தூதரகங்கள்
இதேபோல் பெரும்பாலான ஐரோப்பிய தூதரகங்கள் விசாக்களுக்கான அப்பாயின்ட்மென்ட் கூட வழங்குவதில்லை. தற்போது அப்பாயின்ட்மென்ட் வழங்கும் அரிய நாடுகளில் ஸ்வீடன் உள்ளது. இதேபோல், சுவிட்சர்லாந்து நாட்டிற்குச் செல்ல செப்டம்பர்-இறுதியில் தான் அப்பாயின்ட்மென்ட் பெற முடியும் நிலை தான் தற்போது உள்ளது.

விசிட்டர் விசா
தற்போது அமெரிக்காவிற்கு விசிட்டர் விசா பெறுவது தான் அதிகப்படியான காத்திருப்புக் காலமாக உள்ளது. உதாரணமாகக் கொல்கத்தாவில் இருந்து அமெரிக்காவிற்கு விசிட்டர் விசா பெற வேண்டும் என்றால் 587 நாள் காத்திருக்க வேண்டும். இதுவே டெல்லியில் 581 நாள், சென்னையில் 557 நாள், ஹைதராபாத் 518 நாள், மும்பை 517 நாள்.

காலம் மாறுப்படுகிறது.
மேலும் இந்த விசா காத்திருப்புக் காலம் இந்தியாவில் ஒவ்வொரு விசாவுக்கும் ஒவ்வொரு நகரங்களில் மாறுபடுகிறது. இதனால் அமெரிக்கா செல்ல விரும்புவோர் முன்கூட்டியே விபரங்களைத் தெரிந்துகொண்டு விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். இதேவேளையில் சிலருக்கு 10 நாளில் 10 வருடத்திற்கான Multiple Entry விசா அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
USA Visitor visa appointment only in 2024; more than 580 days waiting time
USA Visitor visa appointment only in 2024; more than 580 days waiting time அமெரிக்கா விசா வாங்க 2024 வரை காத்திருக்க வேண்டும்.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!