ஆபாச உடை அணிபவர்களுக்கு சாட்டை அடி போன்ற தீ்ர்ப்பு… கேரள நீதிமன்றம் அதிரடி!

ஆண்களை ஒப்பிடும்போது இயல்பாகவே அழகாய் இருக்கும் பெண்கள், தாங்கள் அணியும் விதவிதமான உடைகளால் ஆண்களை கவர்ந்திழுக்கதான் செய்கின்றனர். இயற்கையாக அமைந்துள்ள இந்த ஈர்ப்பு ரசனை, அழகியல் என்பதை தாண்டி ஆபசமாக மாறும்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கின்றது.

பிறர் முகம்சுளிக்காதபடி பெண்கள் ஆடைகள் அணியும் வரை அவர்களுக்கும் பிரச்னை இல்லை; அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் சிக்கல் இல்லை. மாறாக ஆடை சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் ஆபாசமாக உடை அணியும் தான் பிரச்னை தொடங்குகிறது. இப்படியொரு பஞ்சாயத்து தான் கேரளாவில் நிகழ்ந்து, விஷயம் கோர்ட் வரை சென்றுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சிவிக் சந்திரன். 74 வயது மாற்றுத்திறனாளியான இவர், கோழிக்கோடு அருகே உள்ள கொயிலானி கடற்கரையில் வைத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் ஒருவர் அண்மையில் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் சிவிக் சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவுடன், தன் மீது பாலியவ் புகார் அளித்துள்ள இளம்பெண், தன் மடி மீது உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக் சந்திரன் இணைத்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்ற்ம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. அதில் ‘மனுதாரர் தனது முன் ஜாமின் மனுவுடன் இணைத்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, அவர் மீது புகார் கொடுத்திருக்கும் பெண் பாலியல் இச்சையை தூண்டும் விதத்தில் ஆபாசமாக உடையணிந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

இந்த நிலையில் வயதான மாற்றுத்திறனாளியான மனுதாரர், தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்று பெண் புகார் தெரிவித்திருப்பது நம்பும் படியாக இல்லை. எனவே மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்கப்படுகிறது’ என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.