புதுடில்லி: அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அலுவலக அதிகாரம் என்னிடம் உள்ளது. அதிமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது என பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.ஆனால், இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், விரிவான விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர்கள், வருவாய்த்துறை பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
புதுடில்லி: அ.தி.மு.க., அலுவலக சாவியை பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிராக பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்