நெல்லை: இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார். அவருக்கு வயது 77.
திருநெல்வேலியில் பிறந்த நெல்லைக் கண்ணன் தலைசிறந்த பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும். இலக்கியவாதியும் ஆவார். காமராசர், கண்ணதாசன் முதலிய 1970களில் தொடங்கி தமிழ்நாட்டு சூழலில் முக்கிய தலைவர்களாக, ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர்.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சமீப காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக நெல்லைக் கண்ணன் (வயது 77) இன்று காலமானார். நெல்லை கண்ணன் மறைவு இலக்கிய உலகத்துக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக நெல்லையில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது.