இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரலாம்! வெளியான அறிவிப்பு


இந்த வருடம் 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் முறையில் ஊக்குவிப்பு வேலைத்திட்டம்

இலட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வரலாம்! வெளியான அறிவிப்பு | Expecting10 Lakh Tourists

நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கைக்கு மீ்ண்டும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருவதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

இதனால் இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 17000ஐத் தாண்டியுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்தது.   எனினும் நாட்டின் நிலைமை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.