இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிரூபிப்பாரா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழருக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே நிகழ்ந்த மோதல் தொடர்பான வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், இலவசங்களால் நாடு வளர்ந்துள்ளது என்பதை தமிழக நிதியமைச்சர் நிரூபிப்பாரா என கேள்வி எழுப்பினார். இலவசம் என்பது ஒருவகை லஞ்சம்தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், அதிமுகவில் நகைச்சுவை நாடகம் நடப்பதாகவும், அதை அனைவரும் வேடிக்கை பார்க்க வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM