எந்த காலத்திலும் அது நடக்காது… திமுகவை பங்கம் செய்த அண்ணாமலை!

புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கையில், பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் குறைந்தபட்ச சமரசம் கிடையாது என்ற முதல்வர் ஸ்டாலினின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பாஜக – ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டணி வைப்பதற்கு குறைந்தபட்ச தகுதி வேண்டும். குடும்ப ஆட்சி இருக்கக் கூடாது. ஊழலற்ற அரசாங்கம் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லாட்சி கொடுக்க வேண்டும்.

இந்த மூன்றுமே இல்லாத திமுகவானது குறைந்தபட்ச சமரசத்தை பற்றி பேசக்கூடாது. நமது முதலமைச்சருக்கு தெரிந்து விட்டது. அதற்கு அருகதை இல்லை என்று. இதை ஒத்துக் கொண்டதற்கு முதல்வருக்கு நன்றி. எந்த காலத்திலும் பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவிற்கு தகுதி கிடையாது என்று பதிலடி கொடுத்தார். இதையடுத்து இலவசங்கள் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில்,

ஒரு கட்சி கிடையாது. சினிமாவில் வருவது போல கூத்து பட்டறை. பிரதமரை சந்திப்பதற்கு முன்பு இப்படி எந்த முதல்வரும் பேசியது கிடையாது. ஆனால் பிரதமரை சந்திக்கும் போது அவர் உட்கார்ந்து இருந்ததை பார்த்தால் நாற்காலியில் இருந்து கீழே விழுவது போல் உட்கார்ந்திருந்தார். திமுக அளித்த 508 வாக்குறுதிகளில் 100 வாக்குறுதிகள் இலவசகளாகவே உள்ளன.

இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்க வேண்டும். இலவசங்களால் வளர்ந்தது திமுக குடும்பமே தவிர தமிழகம் அல்ல எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசும் போது, போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளான ஆகஸ்ட் 14ஆம் தேதி மதுபான கடைகளில் விற்பனையில் சாதனை படைக்கிறது எனக் கூறினார்.

இதையடுத்து பேசுகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு குட்டி இலங்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. அதே குடும்ப ஆட்சி. அங்கு 7 பேர் கன்ட்ரோல் செய்தார்கள். இங்கு 5 பேர் கன்ட்ரோல் செய்கிறார்கள். அதேபோல பொருளாதார சுமை தமிழ்நாட்டிலும் இருக்கிறது என்றார். பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு காங்கிரஸ் கட்சியினர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலை வைப்பதாக கூறியிருக்கிறார்களே எனக் கேட்கப்பட்டது.

அதற்கு, ராகுல் காந்தி ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு வேஷம் போடுவார். ராம் ரஹீம், லிங்காயத்துக்கு தீட்சை, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நான் ஒரு சிவ பக்தன், பள்ளிவாசல், சர்ச் ஏன் குல தெய்வ கோவிலுக்கு கூட செல்வார். அந்த வரிசையில் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலை எடுப்பது என்பது எந்த ஒரு புதிய திட்டமும் கிடையாது‌ என்று அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.