சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஒவ்வொரு எபிசோடும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.கடந்த சில வாரங்களாக அடுத்து என்ன, அடுத்து என்ன என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் கதை சென்று கொண்டிருக்கிறது.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது.இதனால் இன்றைய தேதியில் பாக்யலட்சுமி சீரியல் தான் டிஆர்பி.,யில் முதலிடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
கடந்த வாரம் முழுவதும் பாக்யா வீட்டை விட்டு வெளியேற போகிறார். அடுத்து என்ன நடக்க போகிறது…பாக்யா எங்கு செல்ல போகிறார்…அம்மா, அண்ணாவின் பேச்சை ஏற்று மனம் மாறி கோபியை திருமணம் செய்ய சம்மதிப்பாரா ராதிகா என்ற கேள்விகள் தான் ஓடிக் கொண்டிருக்கிறது.
வீட்டை விட்டு வெளியேறும் கோபி
ஆனால் இன்றைய எபிசோடின் படி கோபி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். வீட்டிற்காக தான் வாங்கிய கடன் 40 லட்சத்தை கொடுத்தால் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்கிறார் கோபி. பாக்கியா 40 லட்சத்தை ஒரு வருடத்தில் தருகிறேன் எனவும் சபதம் போடுகிறார்.
ராதிகாவை சந்திக்கும் கோபி
இப்போது இருக்க இடமில்லாமல் நடுத்தெருவுக்கு சென்ற கோபி அடுத்து ராதிகாவை தான் சந்திக்க செல்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.கோபியின் நண்பரும் அவருக்கு அதையே அட்வைசாக வழங்குகிறார்.கோபியும் அதே போல் உனக்காக தான் வீட்டை விட்டு வெளியே வந்தேன் என ராதிகாவிடம் சொல்வது போல் ப்ரொமோ காட்டப்படுகிறது.
அடுத்து ராதிகா – கோபி திருமணமா?
இப்படி இருக்கையில் அடுத்து ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தற்கொலை முயற்சி வரை செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ராதிகாவும் கோபியின் நடிப்பை மீண்டும் நம்பி, திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விடுவார் என்றே சொல்லப்படுகிறது.
மனம் மாறும் ராதிகா
ஏற்கெனவே கோபி பற்றிய எல்லா உண்மையும் தெரிந்த பின்பு ராதிகா அவரை வெறுத்து விட்டார்.கோபியிடம் பேசுவதையும் நிறுத்து விட்டார். ஆனால் ராதிகாவின் அம்மா, அண்ணன் ராதிகாவை கோபிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கின்றனர். பாக்கியாவுக்கும் கோபிக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது என்று தெரிந்ததும் அவர்கள் ராதிகாவின் மனசை மாற்ற தொடங்கி விட்டார்கள்.
கோபி போடும் டிராமா
இப்படி இருக்கையில் கோபி வீட்டை விட்டு வெளியே வந்ததும் ராதிகாவுக்காக தான். இப்படி இருக்கையில் அவர் ராதிகாவை சந்தித்து பேசி திருமணம் பற்றி வற்புறுத்துவார் என தெரிகிறது.ராதிகா அதற்கு சம்மதிக்காத போது தற்கொலை வரை சென்று அவரை ஏமாற்றி மனசை மாற்ற முயற்சி செய்வார் எனவும் இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.
அடுத்த ட்விஸ்ட் இதுதானா?
அதுமட்டுமில்லை பாக்கியாவை ஜெயிக்க விடாமல் செய்ய கோபி பல சதிகளை இனி செய்வார் எனவும் கூறப்படுகிறது. இனி கோபி – பாக்யா மோதல் காட்சிகள், பாக்யாவின் முன்னேற்றம் நடக்கும் என சொல்லப்படுகிறது. அதோடு கோபி – பாக்யா பிரிவிற்கு எழில் தான் காரணம் என ஒட்டுமொத்த குடும்பத்தின் கோபமும் எழில் பக்கம் திரும்புகிறது.இது தான் பாக்யலட்சுமி சீரியலில் அடுத்து நடக்க போகும் ட்விஸ்ட் என சொல்லப்படுகிறது.