எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நேரலாம்… ஒத்திகை தொடங்கிய உக்ரேனியப் படைகள்


அணு உலை கதிர்வீச்சு கசிவு ஐரோப்பாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் – ஏற்கனவே எச்சரித்த விஞ்ஞானிகள்

எப்போது வேண்டுமானாலும் பேரழிவு என்ற அச்சம் எழுந்துள்ள காரணத்தால், உக்ரேனியப் படைகள் ஒத்திகை

செர்னோபில் போன்ற அணுசக்தி பேரழிவு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், உக்ரேனியப் படைகள் ஒத்திகை தொடங்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரேனிய அவசர அமைச்சகத்தின் மீட்புப் பணியாளர்கள், அணுசக்தி விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலையில் தயார்படுத்துவதற்காக ஜபோரிஜியா நகரில் பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நேரலாம்... ஒத்திகை தொடங்கிய உக்ரேனியப் படைகள் | Nuclear Disaster Ukrainian Forces Are Rehearsing

@Reuters

குறித்த அணு உலை கதிர்வீச்சு கசிவு ஐரோப்பாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே வெடிகுண்டு வீசப்பட்டு சின்னாபின்னமான நகரில் அணுசக்தி தொடர்பான பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1986 செர்னோபில் அணுஉலை பேரழிவால் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் அந்த ஆழமான வடுவில் இருந்து இன்னமும் மீளாமல் உள்ளது.
தெற்கு உக்ரைனில் அமைந்துள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையமானது போரின் ஆரம்ப நாட்களில் ஆக்கிரமிக்கப்பட்டது மற்றும் அது அன்றிலிருந்து ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

மேலும், அணுமின் நிலையத்தினை கேடயமாக பயன்படுத்தும் ரஷ்ய துருப்புகள் இங்கிருந்து உக்ரைன் மீது தாக்குதலும் தொடுத்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட 42 நாடுகளின் கூட்டமைப்பு ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டது.

எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நேரலாம்... ஒத்திகை தொடங்கிய உக்ரேனியப் படைகள் | Nuclear Disaster Ukrainian Forces Are Rehearsing

@Getty

அதில், குறித்த ஆலையில் இருந்து ரஷ்யா துருப்புக்களை திரும்பப் பெற வேண்டும் எனவும் சர்வதேச அணுசக்தி முகமையானது அந்த அணுமின் நிலையத்தை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.

ரஷ்ய துருப்புகள் ஆக்கிரமித்துள்ளதால் உக்ரேனிய அதிகாரிகளால் தங்கள் பணியை முன்னெடுக்க முடியாமல் போவதாகவும், பாதுகாப்பு நடைமுறைகளை இதனால் தவற விடுவதாகவும் அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

எப்போது வேண்டுமானாலும் அந்த ஆபத்து நேரலாம்... ஒத்திகை தொடங்கிய உக்ரேனியப் படைகள் | Nuclear Disaster Ukrainian Forces Are Rehearsing

@Getty

இதனிடையே, சர்வதேச அணுசக்தி முகமையானது முன்னெடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் ரஷ்யா ஒத்துழைக்கும் என ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா திங்கட்கிழமை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.