எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்…இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு


  • எரிமலையில் தவறி விழுந்து உயிரிழந்த 25 வயது பிரித்தானியர்.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்தது இஸ்ரேல் தூதரகம்.

 குய்டோ-ஈக்வடாரில் அமைந்துள்ள ருகு பிச்சிஞ்சா எரிமலையில்(Rucu Pichincha volcano) ஏற முயன்ற கில் பேங்க்ஸ்(25) அதனுள் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கியூட்டோவுக்கு அருகிலுள்ள ருகு பிச்சிஞ்சா எரிமலை மீது ஏற முயன்ற போது அவற்றில் இருந்து தவறி கீழே விழுந்து கில் பேங்க்ஸ் (Gil Banks) உயிரிழந்துள்ளார்.

எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்...இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு | Brit Man Gil Banks25 Dies After Slip Into Volcano

பிரித்தானியாவில் பிறந்த கில் பேங்க்ஸ், தற்போது தனது குடும்பத்துடன் இஸ்ரேலில் வசித்து வருவதாக கிளாஸ்கோ லைவ் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14, ஞாயிற்றுக்கிழமை குய்டோ-ஈக்வடாரில் அமைந்துள்ள ருகு பிச்சிஞ்சா எரிமலையில் ஏற முயன்றபோது தவறி விழுந்த இளம் இஸ்ரேலியர் கில் பேங்க்ஸ் இறந்ததாக ஈக்வடாரில்(Ecuador) உள்ள இஸ்ரேல் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்...இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு | Brit Man Gil Banks25 Dies After Slip Into VolcanoGetty Images

25 வயதான இஸ்ரேலியரின் மரணத்தைத் தொடர்ந்து தூதரகம், இந்த ஆழ்ந்த இழப்புக்கு நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம் மற்றும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் உண்மையான இரங்கலைத் தெரிவிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை… உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்வைக்கும் நிபந்தனை

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல், வெளியிட்ட தகவலில் பேங்க்ஸ் சமீபத்தில் ஒரு உயரடுக்கு இராணுவப் பிரிவில் பணியை முடித்துவிட்டு தென் அமெரிக்காவைச் சுற்றிப் பயணம் செய்ததாக அறிவித்ததுள்ளது.

எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்...இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு | Brit Man Gil Banks25 Dies After Slip Into VolcanoGetty Images



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.