வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
நம் அத்யாவசிய தேவைகள் மிகவும் குறைவு, எளிதாக நம் மாத சம்பளத்தில் அதை நம்மால் பூர்த்தி செய்துகொள்ள முடியும். இருப்பினும் பலர் ஒவ்வொரு மாத இறுதியிலும் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர்.
எத்தனை சம்பாதித்தாலும் கையில் காசு தங்கவில்லையே என்று வருத்தம் கொள்கின்றனர். 10,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை , 1,00,000 ரூ சம்பளம் வாங்குவோருக்கும் இதே நிலை தான். இதன் காரணம் என்ன? காண்போம்…
பணப்பற்றாக்குறை
அளவில்லாமல் செலவிடுவதுதான் பணப்பற்றாக்குறைக்கு முக்கிய காரணம். நம் ஆசைகளுக்கு அளவே இல்லை அது பேரண்டம் போல, அவை அனைத்தையும் நிறைவேற்ற எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது.
மாதத்தில் பல முறை உணவை ஆர்டர் செய்கிறோம், Branded Clothes தான் தரமானது என்று எண்ணி விலை உயர்ந்ந்த உடைகளுக்காக செலவிடுகிறோம், ஒவ்வொரு வாரமும் தவறாமல் Mall’க்கு சென்று ஒரு திரைப்படம் பார்க்கிறோம்.
நம் சம்பளம் அதிகரித்தால் நாம் அதை எவ்வாறு செலவு செய்வது என்றே சிந்திக்கிறோம், நம்மிடம் நன்றாக செயல்படும் கைபேசி இருந்தாலும், மார்க்கெட்டில் வருகின்ற புது மொபைல் போன் வாங்குகின்றோம்.
அட அவரு பைக் நல்லா இருக்கே நாமளும் EMI ல வாங்கலாமே, கார் இருந்த கெத்தா இருக்குமே லோன் போற்றுவோம் சம்பளம் அதிகமாயிருக்கே சமாளிச்சரலாம்…
இது போன்ற செலவுகலால் நாம் EMI கட்டுவதற்காகவே வேளைக்கு செல்ல வேண்டும்.
செலவை குறைத்தல்
ஆசைகள் தவறல்ல, நம் ஆசைகளுக்காக செய்கின்ற செலவு நம் அன்றாட வாழ்வை பாதித்து விடக்கூடாது. நம் செலவை கட்டுப்படுத்த முதலில் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்று தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு டைரி’யை maintain செய்யுங்கள், அதில் உங்கள் வரவு செலவுகளை மட்டுமே குறிப்பிடுங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கான விடைகளை அந்த டைரியில் எழுதுங்கள்,
1. கடந்த மாதம் ஏன் பணப்பற்றாக்குறை ஏற்பட்டது?
2. என் மாத வருமானம் என்ன?
2. என்னென்ன செலவுகள் செய்தேன்?
3. தேவைகளுக்காக எவ்வளவு?
4. ஆசைகளுக்காக எவ்வளவு?
5. அதில் எதை எல்லாம் நான் தவிர்த்து இருக்கலாம்?
6. அதை நான் தவிர்த்து இருந்தால் மீதம் எவ்வளவு பணம் என்னிடம் இருந்து இருக்கும்?
நீங்கள் எழுதிய பதில்களை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.
அதில் தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டாலே, நிச்சயமாக பணப்பற்றாக்குறை ஏற்படாது. கணிசமான ஒரு தொகை எப்போதுமே உங்கள் கையில் இருக்கும்.
அந்த தொகைதான் சேமிப்பின் தொடக்கம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.