சென்னை: ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, ஆனால், பதவி மட்டும் வேண்டும். அவருடன் எப்படி இணைய முடியும்? என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆவேசசமாக கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் தொண்டர்கள் ஆதரவு இருந்தால் அதை பொதுக்குழுவில் நிரூபிக்கலாமே என்றும் கூறினார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்படி தரப்பு கூட்டிய பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டு உள்ளதுடன், ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலைமையே தொடர வேண்டும் என்றும், இரண்டு தலைமையும் இணையந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து ஓபிஎஸ், இணைந்து பணியாற்ற இபிஎஎஸ்-க்கு அழைப்பு விடுத்ததுடன், இனிமேல் வசந்தகாலம்தான் என்றும், சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து பணியாற்றலாம் என கூறினார்.
இந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. தொடர்ந்து, தனது கிரீன் வேஸ் சாலை இல்லத்தில் செய்தியாளர் களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் கூறியதாவது,
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்சவப்படுத்த நினைக்கின்றனர். அதிமுகவை தன்வசம் கொண்டுபோக சிலர் முயற்சிப்பதே இன்றைய பிரச்னைக்கு காரணம். அதனை தடுக்கும் போதுதான் பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அது தான் இப்போதும் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில், பொதுச்செயலாளருக்கு இணையான ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களினால் தேர்ந்தெடுப்பார்கள் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுகவில் பொதுக்குழுவுக்கு மட்டுமே முழு அதிகாரம். செயற்குழுவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டால் மட்டுமே தீர்மானம் செல்லும். ஒப்புதல் பெறாததால் இரட்டை தலைமை பதவி காலாவதியாகிவிட்டது என்பதை மீண்டும் உறுதி செய்தார். பொதுக்குழுவுக்கு தான் அனைத்து அதிகாரம் தான் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர், “ஓபிஎஸ் இப்படித்தான் அடிக்கடி அழைப்பு கொடுப்பார், யாரை எதிர்த்து பதவி பெற்றாரோ அவர்களை அழைப்பார். தர்மயுத்தம் போனதே சிலரை எதிர்த்துதான் அவர்களைதான் அழைக்கிறார். அவருடைய மகன் எம்.பி ஆகவும், மற்றொருவர் மத்திய மந்திரியாகவும் ஆகவேண்டும், வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை. எப்போதும் பதவியில் இருக்க வேண்டும் என நினைப்பவர் ஓபிஎஸ். ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை என்று காட்டமாக விமர்சித்தவர், கட்சி உயர் பொறுப்பில் உள்ள ஓபிஎஸ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் எப்படி இணைந்து செயல்பட முடியும்? என கேள்வி எழுப்பினார். தனக்கு தொடர்கள் ஆதரவு இருப்பதாக கூறும் ஓபிஎஸ், அதை பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டியதுதானே?
எப்போதும் எந்த பதவிக்கும் நான் ஆசைப்பட்டது இல்லை. கட்சியில் படிப்படியாக உயர்ந்தவன் நான், நான் எப்போதும் சொந்த காலில் நிற்க விரும்புபவன், கட்சிக்கு சோதனையான காலத்திலும் உண்மயாக செயல்பட்டேன். நான் இல்லை என்றாலும் கட்சிக்கு வேறு ஒரு தலைவர் வருவார், ஆனால் கட்சி தலைவரை மதிக்க வேண்டும். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம். அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அடிப்படை தொண்டர்களின் பிரதிநிதிகள் . தொண்டர்கள் விருப்பத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தனர். யார் ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்பதை யாரும் குறிப்பிடவில்லை. யார் ஒற்றை தலைமை என கூறாத நிலையில் பொதுக்குழுவுக்கு தடைகோரி நீதிமன்றம் சென்றவர் ஓபிஎஸ்தான் என்றவர், தனக்கு தொண்டர்கள் ஆதரவு இருந்தால், அதை பொதுக்குழுவில் நிரூபிக்க வேண்டியதுதானே…
மேலும், கடந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் ஓபிஎஸ் தான், அவர் பதவிக்கு வரவேண்டுமென்றால் என்ன வேண்டுமானும் செய்வார் . அவருடன் எப்படி இணைய முடியும்? எந்த அடிப்படையில் இணைப்பு பத்தி பேசுகிறார்? என்றவர், அவர் திமுகவுடன் உறவு வைத்திருக்கிறார், அதை எப்படி அதிமுகவினர் ஏற்பார்கள் என்றவர், சிலரின் ஆலோசனைபடியே ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்று கூறியவர், கட்சி அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர், ரவுடிகளை வைத்து அலுவலகத்தின் மீதி தாக்குதல் நடத்தி முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றுள்ளனர், அவர்களோடு எப்படி இணைந்து செயல்பட முடியும் ?” என்று கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிச்சாமி பேட்டியின்மூலம் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி நிராகரித்துள்ளது தெரிய வந்துள்ளது
தர்மயுத்தம் என்னாச்சு? சசிகலா, டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் அழைப்பு…
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு: எடப்பாடி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு….