கூகுள் பே, போன்பே பரிவர்த்தனைக்கும் கட்டணமா? ஆர்பிஐ விவாதம் சொல்வதென்ன?

விரைவில் உங்களது டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் உள்பட பல பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு , யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாகவும், இது குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டிருக்கும் பணபரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட நடைமுறைகளை கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இது குறித்து மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

சீனா நிறுவனத்துக்கு பெருத்த அடி.. அடுத்தடுத்து சரியும் சீன சாம்ராஜ்ஜியங்கள்!

கருத்து தெரிவிக்கலாம்

கருத்து தெரிவிக்கலாம்

இது குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால் அக்டோபர் 3ம் தேதிக்குள் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்குமாறும் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று சிறிய சிறிய நடை பாதை கடை தொடங்கி, பெரிய பெரிய ஷோரூம் வரையில் யுபிஐ பரிவர்த்தனையே பெரியளவில் செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் கட்டணம்

எதற்கெல்லாம் கட்டணம்

ரிசர்வ் வங்கியின் இந்த கட்டண அதிகரிப்பானது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஐஎம்பிஎஸ், நெப்ட், ஆர்டிஜிஎஸ், பிபிஐ, மற்றும் யுபிஐ சேவைகளுக்கு இந்த கட்டண அதிகரிப்பானது விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அரசின் வருவாயை அதிகரிக்கலாம் என்பதோடு, வங்கிகளின் வருவாயையும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய கட்டணம்
 

மக்கள் ஏற்றுக் கொள்ள கூடிய கட்டணம்

இந்தியாவின் கட்டண முறைகளை பற்றிய அறிக்கையில் ஆர்பிஐ, பணம் செலுத்தும் பரிவர்த்தனையில் பல இடைத்தரகர்கள் உள்ளனர். எனினும் நுகர்வோர் புகார்கள் பொதுவாக அதிக மற்றும் வெளிப்படையான கட்டணங்களை பற்றியது தான். இந்த கட்டணங்கள் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களுக்கும் உகந்த வருவாயினை கொடுக்க வேண்டும். ஆக இதனை உறுதி செய்ய இது விவாதிக்கப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

விரைவில் கட்டணம்

விரைவில் கட்டணம்

மொத்தத்தில் விரைவில் உங்கள் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம். குறிப்பாக யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க கட்டணம் விதிக்கப்படனுமா? அப்படி விதிக்கப்பட்டால் எவ்வளவு விதிக்கப்படலாம்? உங்கள் கருத்துகளை மறக்காம பதிவு செய்ங்க

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rbi ஆர்பிஐ

English summary

RBI releases discussion paper on charges on transactions via debit, credit cards, UPI and others

RBI releases discussion paper on charges on transactions via debit, credit cards, UPI and others/கூகுள் பே, போன்பே பரிவர்த்தனைக்கும் கட்டணமா? ஆர்பிஐ விவாதம் சொல்வதென்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.