75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில்,கோவையை அடுத்த குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி.இவரது மகன்கள் முரளிதரன்,கவின்தரன்.மாதம்பட்டி அரசு பள்ளியில் எட்டாவது மற்றும் நான்காவது படித்து வரும் இரு சிறுவர்களும் ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில,தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி பல உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். தற்போது தடை செய்த நெகிழிகளை பயன்படுத்தாதீர் எனும் விழிப்புணர்வு பிரசசாரத்தை 75 நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்படுத்தும் விதமாக கையில் தேசிய கொடி ஏந்தியவாறு ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
மூன்று நாட்கள் இந்த பயணத்தை தொடர உள்ள நிலையில் முதல் நாள் மாதம்பட்டியில் துவங்கி பேரூர்வரை ஸ்கேட்டிங் செய்து சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன போக்குவரத்து மிகுந்த சாலைகளில் இருவரும் ஸ்கேட்டிங் செய்து சென்றதை பொதுமக்கள் வியந்து பார்த்தனர். பசுமைக்கு எதிரியாக உள்ள பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்காகவே இந்த ஸ்கேட்டிங் பயணத்தை நடத்துவதாக சிறுவர்கள் தெரிவித்தனர். இந்த சிறு வயதில் இரண்டு பேருக்கும் சமூகம் குறித்தும் இருக்கும் அக்கறையை பலரும் பாராட்டிவருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ