பெர்லின்: ஜெர்மனி நாட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபருக்கு எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video – Watch Now
மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகெங்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆப்பிரிக்காவுக்குள் மட்டுமே பரவிய மங்கி பாக்ஸ் எப்படி இந்தளவுக்கு வேகமாக உலகெங்கும் பரவியது என்பது ஆய்வாளர்களுக்கே தெரியவில்லை.
இந்தியாவிலும் இதுவரை சிலருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. உலக சுகாதார அமைப்பும் கூட மங்கி பாக்ஸ் பாதிப்பை பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.

ஜெர்மனி
இந்தச் சூழலில் ஜெர்மனி நாட்டில் நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனி நாட்டில் சமீபத்தில் 40 வயதான நபர் ஒருவருக்கு மங்கி பாக்ஸ் ஏற்பட்டு உள்ளது. அந்த நபரின் மூக்கின் மையத்தில் சிவப்பு நிறத்தில் எதோ சிறு கொப்புளம் தோன்றி உள்ளது. அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தான் அவருக்கு மங்கி பாக்ஸ் இருப்பது உறுதியானது. பிரிட்டஷ் நாட்டை சேர்ந்த அவருக்கு நடந்த சம்பவம் வினோதமாக உள்ளது.

மூக்கு
அந்த நபரின் மூக்கு திடீரென ‘அழுகி’ போகத் தொடங்கி உள்ளது. அதேபோல வெள்ளை நிறத்தில் மூக்கில் இருந்து சீல் வடியவும் தொடங்கி உள்ளது. முதலில் மருத்துவரால் கூட அவருக்கு என்ன ஆனது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை. சூடு காரணமாகவே மூக்கில் கொப்புளம் வந்துள்ளதாக மருத்துவர் முதலில் கூறி அனுப்பிவிட்டார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல மூக்கில் இருந்த கொப்புளம் பெரிதானது மட்டுமின்றி அது உடல் முழுக்க பரவ தொடங்கி உள்ளது.

சீல்
சில நாட்களில் அவரது மூக்கில் இருந்து சீல் வடியத் தொடங்கியதாகவும் கூறுகிறார். மேலும், அவரது முழு உடலிலும் கொப்புளங்கள் வளர்ந்ததாகவும் குறிப்பாக வாய் மற்றும் ஆணுறுப்பு பகுதியில் கொப்புளங்கள் மிகவும் மோசமாக இருந்தாக தெரிவித்தார். அதன் பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தான் மங்கி பாக்ஸ் இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனை சிகிச்சையில் அவரது உடல்நிலை மெல்ல மேம்பட்டது.

எச்ஐவி பாதிப்பு
அப்போது அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் எச்ஐவி பாதிப்பும் உறுதியானது. அதேநேரம் அந்த நபர் இதுநாள் வரை தனக்கு எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது இல்லை என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவர் முறையான டெஸ்ட் எடுக்காததாலேயே அவரது உடலில் எச்ஐவி கண்டறியப்படாமல் போய் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

நெக்ரோசிஸ்
மேலும் அந்த நபருக்கு நெக்ரோசிஸ் என்ற பாதிப்பு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. நெக்ரோசிஸ் என்றால் நோய்ப் பாதிப்பால் திசுக்கள் இறக்கத் தொடங்கும்.. அதே நேரம் வலுவான நோயெதிர்ப்பு மண்டலம் அதைத் தடுக்க முயலும். இதன் காரணமாக உடலின் பாகங்களுக்குச் செல்ல வேண்டிய ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை குறைந்து ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

தீவி பாதிப்பு
மங்கி பாக்ஸ் வேகமாகப் பரவினாலும் கூட இதுவரை எல்லாருக்கும் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் எச்ஐவி தொற்றுக்கு முறையாகச் சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மங்கி பாக்ஸ் மோசமான பாதிப்பையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர்.