ரியாத்: சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண்ணுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சல்மா அல் செஹாப் என்பவர் டிவிட்டர் மூலம் சவுதி அரசுக்கு எதிரான செய்திகளை பகிர்ந்து வந்துள்ளார். டிவிட்டர் மூலம் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க முயன்றதாக சல்மா அல் செஹாப் மீது சவுதி அரசு வழக்கு பதிந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சல்மா அல் செஹாப்புக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
