தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்கப் பணியின் போது , சாலையின் நடுவில் 8 மின்கம்பங்களை வைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தென்னூர் பகுதியில் வளைவாக இருந்த சாலையை நேராக அமைக்கும் வகையில் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது சாலையின் குறுக்கே அமைந்த மின்கம்பத்தை அகற்றி, சாலையோரம் அமைக்கும் முன்னரே, அந்த மின்கம்பத்தை சாலையின் நடுவில் வைத்தே சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இரவுநேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், சாலை அகலமாக இருப்பதாகக் கருதி சென்றால் விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.