உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் சமீபத்திய காலாண்டுகளாகவே, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சீன நிறுவனங்கள் ஒவ்வொன்றாக சரியத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்தில் சீனாவின் மாபெரும் நம்பிக்கையாக இருந்து வந்த எவர்கிராண்டே தொடங்கி, பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் முடங்கியுள்ளது. இதற்கிடையில் சீனாவின் பல முக்கிய வங்கிகளும் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதற்கிடையில் சீனாவின் பல முன்னணி நிறுவனங்கள் கூட சரிவின் விளிம்பில் இருப்பதாகவும், அரசின் உதவியினை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மீண்டும் டெக் நிறுவனங்களை மிரட்டும் ஜி ஜின்பிங்.. டென்சென்ட் பங்குகள் பெரும் சரிவு..!
முதல் முறையாக மோசமான நிலை
இந்த நிலையில் தற்போது சீனாவின் கேம் ஜாம்பவான் ஆன டென்சென்ட் நிறுவனம், இது வரை இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் வருவாய் சரிவினைக் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது அதன் விற்பனையானது மோசமான அளவு சரிவினைக் கண்ட நிலையில், இந்தளவுக்கு பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனாவுன் ஒரு காரணம்
சீனா கேம் ஜாம்பவானின் இந்த பிரச்சனைக்கு பல கேம்கள் அப்ரூவலுக்கு தாமதமாகியுள்ளதாகவும், அரசின் கடுமையான நடவடிக்கையினால் விளையாடும் நேரத்தை குறைக்க வழிவகுக்கிறது. இதற்கிடையில் சீனாவில் பரவி வரும் கொரோனாவால் , அங்கு கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டன. இதுவும் சரிவுக்கு வழிவகுத்துள்ளது.
சீனாவின் அடக்குமுறையும் ஒரு காரணம்
லாக்டவுனுக்கு மத்தியில் பொருளாதார நடவடிக்கைகள் என்பது சுருங்கியுள்ளன. இந்த சுருக்கமானது கேம் ஜாம்பவானின் வளர்ச்சியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2020-க்கு பிறகு சீனா அரசின் அடக்குமுறையானது அதிகரித்துள்ளது. இதனால் டென்சென்ட் உள்பட பல நிறுவனங்களும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
2004-க்கு பிறகு மோசமான சரிவு
2004ம் ஆண்டில் இருந்து பொதுவில் வந்ததில் இருந்து, கிட்டதட்ட ஒவ்வொரு காலாண்டிலும் நிறுவனம் இரட்டை இலக்கில் தான் வளர்ச்சி கண்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு பெரும் வீழ்ச்சி வந்துள்ளது.
டென்சென்ட் நிறுவனம், உணவு டெலிவரி நிறுவனமாக மெய்துவானில் அதன் வசம் உள்ள 24 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியினை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செலவினங்கள் குறைப்பு
கடந்த ஜூன் காலாண்டில் இதன் வருவாய் விகிதம் 3% குறைந்து, 134.034 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 138..259 பில்லியன் டாலராகவும் இருந்தது. இது குறித்து டென்சென்டின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மா ஹுவாடெங், நாங்கள் இரண்டாவது காலாண்டில் முக்கியம் அல்லாத வணிகங்களில் இருந்து வெளியேறி செலவினங்களை கட்டுபடுத்தியுள்ளோம். கடுமையான சவால்கள் இருந்த போதிலும் வருவாயினை அதிகரிக்க இதுவே காரணமாகவும் அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
இதுவும் ஒரு காரணம்
இந்த வருவாய் சரிவு என்பது மிகப்பெரிய பிரச்சனை என்பது ஒரு புறம் எனில், டென்செண்டின் முக்கிய கேம் ஆன பப்ஜி கேமினை இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் தடை செய்யத் தொடங்கியுள்ளன. இது மேற்கொண்டு அதன் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு புதிய கேமில் அப்ரூவல் செய்வதையும் தடை செய்யலாம். தாமதமாக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
China’s Tencent reports first-ever revenue decline amid tough challenges
China’s Tencent reports first-ever revenue decline amid tough challenges/சீனா நிறுவனத்துக்கு பெருத்த அடி.. அடுத்தடுத்து சரியும் சீன சாம்ராஜ்ஜியங்கள்!