தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இன்றும் 1800 டாலர்களுக்கு கீழாகவே காணப்படுகின்றது.
இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், அழுத்தத்திலேயே காணப்படுகின்றது.
எனினும் தற்போது சர்வதேச சந்தையில் பெரியளவில் ஏற்றம் காணாவிட்டாலும், சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது ஃபெடரல் வங்கி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும் குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?
தங்கம் விலை சரியலாம்
ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவினை பொறுத்து தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் மாற்றம் காணலாம் என்றாலும், அமெரிக்கா டாலரின் மதிப்பு இன்று மேற்கொண்டு வலுவாக காணப்படுகின்றது. பத்திர சந்தையும் 2.9% ஏற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீட்டினை அதிகரிக்க தூண்டலாம். இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம். இது மீடியம் டெர்மி தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.
ஏற்ற இறக்கம் இருக்கலாம்
எனினும் வரவிருக்கும் நாட்களில் ஃபெடரல் வங்கி கூட்டத்தில் வட்டி அதிகரிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய தரவுகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது இனி வரும் நாட்களில் சற்று ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பணவீக்கம் அதிகரிக்கலாம் என்ற நிலைக்கு மத்தியில் இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுக்கலாம்.
இனி எப்படியிருக்கும்
எனினும் இனி வரும் நாட்களில் வரவிருக்கும் பொருளாதாரம் குறித்தான தரவுகள் சந்தைக்கு சாதகமான இருப்பின், இது மேற்கொண்டு டாலரின் மதிப்பினை ஊக்குவிக்கலாம். அதேசமயம் வளர்ச்சி குறைந்தால் அதுவும் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். பணவீக்கம் என்பது தற்போது சற்று தளர தொடங்கியுள்ள நிலையில், ஃபெடரல் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேவை அதிகரிக்கலாம்
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், வளர்ச்சி விகிதமானது பாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம், விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பணவீக்கமும் இருந்து வருகின்றது. ஆக முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்?
தங்கம் விலையானது தற்போது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு பெரியளவில் மாற்றமின்றி, 1777.90 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்னும் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. வெள்ளி விலைய சற்று குறைந்து, 19.598 டாலராக காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
இந்திய சந்தையில் தங்கம் விலையானது தற்போது 10 கிராமுக்கு 157 ரூபாய் அதிகரித்து, 51,700 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதே வெள்ளி விலையும் கிலோவுக்கு 215 ரூபாய் குறைந்து, 56,700 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. சர்வதேச சந்தையில் விலை தடுமாறும் நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலை சற்று அதிகரித்தும், வெள்ளி விலை குறைந்தும் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.
ஆபரண தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்து தான் காணப்படுகின்றது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4838 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 38,704 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 13 ரூபாய் குறைந்து, 5277 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 42,216 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 104 ரூபாய் குறைந்து, 52,770 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
இதே ஆபரண வெள்ளி விலை இன்று சற்று குறைந்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 90 பைசா குறைந்து, 62.40 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 624 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 900 ரூபாய் குறைந்து, 62,400 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
முக்கிய நகரங்களில் விலை என்ன?
22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)
சென்னையில் இன்று – ரூ.48,380
மும்பை – ரூ.47,900
டெல்லி – ரூ.48,050
பெங்களூர் – ரூ.47,950
கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் – ரூ.48,380
gold price on 18th August 2022: Gold prices to edge lower following FOMC minutes
gold price on 18th August 2022: Gold prices to edge lower following FOMC minutes/சூப்பர் சான்ஸ்.. இன்றும் தங்கம் விலை குறைந்திருக்கு..வாங்க நல்ல சான்ஸ்!