சென்னை: சென்னை தினத்தையொட்டி ஆகஸ்ட் 20-ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி 6 மணி வரை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 7-வது நிழற்சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 3-வது மெயின் ரோட்டில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.