ஜம்மு காஷ்மீர்: இதோ புது உருட்டு… கொதிச்சு போன அரசியல் கட்சிகள்!

ஜம்மு காஷ்மீர் என்ற பெயரை கேட்டாலே முதலில் நினைவுக்கு வருவது சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதும் தான். கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மாற்றத்தின் விளைவுகளை இன்றளவும் அப்பகுதியில் காண முடிவதாக கூறுகின்றனர். இத்தகைய அதிரடி நடவடிக்கையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு எடுத்தது.

அதன்பிறகு பல்வேறு மாற்றங்கள், திருத்தங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் முறையில் புதிய மாற்றம் ஜம்மு காஷ்மீரில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஜம்மு காஷ்மீரை சாராத மக்களும் முறையாக பதிவு செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என்ற நிலை வந்திருக்கிறது. இதற்கு முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முக்தி, உமர் அப்துல்லா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுக்கு குட் நியூஸ்..! – மத்திய அரசின் புதிய திட்டம்..!!

இது தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சி என்று குற்றம்சாட்டுகின்றனர். ஜம்மு காஷ்மீரில் தேர்தலே நடக்காமல் கடந்த 4 ஆண்டுகளாக நிர்வாகம் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் வாக்காளர் பதிவில் கொண்டு வரப்பட்டுள்ள சிறப்பு திருத்தம் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் தலைமை தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய தகவல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளன.

அதாவது, 20 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 76 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் நிலையில், மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் புதிதாக சேரக்கூடும். குறிப்பாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி. அவர்கள் ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்தாலும், வேலை செய்தாலும் இனி வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இலவச திட்டங்களுக்கு தடை கோரி வழக்கு..! – என்ன சொல்கிறது உச்ச நீதி மன்றம்..?

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட உமர் அப்துல்லா, நேர்மையான வாக்காளர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைக்காது என்று பாஜக எண்ணி விட்டதோ? அதற்காக தான் தேர்தலில் வெற்றி பெற தற்காலிக வாக்காளர்கள் என்ற பெயரில் வேறு மாநிலத்தவர்களை இறக்குமதி செய்கிறார்களா? ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும் போது அவை எதுவும் பாஜகவுக்கு உதவாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.