தடம் மாறிய குட்டிகளை தேடிய தாய் கரடி : குடும்பத்தை ஒன்று சேர்த்த வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கிராமப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக  குன்னூர் அருகேவுள்ள கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட கூக்கல் கிராம பகுதியில் வனப்பகுதியில் இருந்து உணவை தேடி மக்கள் வசிக்கும் பகுதியிலும், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளிலும் கரடிகள் வலம் வந்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். இதனிடையே கடந்த மாதம் ஒரு வயது மதிக்கதக்க இரண்டு கரடிகள் வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து கூண்டிற்குள் இருந்து காரடி குட்டிகளை மீட்ட வனசரகர் செல்வக்குமார்  தலைமையில்  வனத்துறையினர் அவற்றை முதுமலையில் விட்டனர்.

ஆனால்  கூண்டில் சிக்காத தாய் கரடி குட்டிகளை காண தினந்தோறும் கூக்கல் கிராமத்திற்கு வந்த வண்ணம் இருந்துள்ளது. இந்த தாய் கரடியை பிடிக்க கடந்த ஒரு மாத காலமாக வனத்துறையினர் கூண்டு வைத்து சிசிடிவி கேமரா மூலமாக இரவு முழுவதும் கண் விழித்து கரடியின் நடமாட்டத்தை கண்கானித்து வந்தனது.

இதனிடையே நேற்று இரவு வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் கரடி சிக்கியது. இதனையடுத்து முதுமலையில் குட்டிகள் விடப்பட்ட அதே இடத்திலேயே தாய் கரடியை வனத்துறையினர் விடுவித்தனர்.

கரடி அப்பகுதியில் வலம் வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் கரடி தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்த நிலையில், மனிதர்களை கரடி  தாக்கும் முன்னதாக அதை ஒரு சில நாட்களில் பிடித்து முதுமலை வனப்பகுதியில் விடுவேன் என  வனசரகர் உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.