நான் எனது வீட்டை இழக்கவில்லை என நடிகர் மாதவன் விளக்கம்.
மாதவன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் டுவிட்டரில் விளக்கம்
ராக்கெட்ரி படத்திற்காக நடிகர் மாதவன் தனது வீட்டை இழந்ததாக டுவிட்டரில் தகவல் வெளியான நிலையில் அதை அவர் மறுத்துள்ளார்.
நடிகர் மாதவனின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் ராகெட்ரி திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் மாதவன், டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து ’ராக்கெட்டரி’ படத்திற்காக மாதவன் தன்னுடைய வீட்டை இழந்தார்.
இந்தப் படத்தை இயக்க, முன்னதாக ஒப்புக்கொண்ட இயக்குநர் பின் வாங்கினார். ஆனால் அதே நேரத்தில் அவரது மகன் நாட்டிற்காக நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை பெற்று வருகிறார். சல்யூட் ஃபார் மேடி என்று பதிவிட்டிருந்தார் ஒரு பதிவர்.
primesworld
இதைதான் மாதவன் மறுத்திருக்கிறார்.
அவரின் மறுபதிவில், தயவு செய்து என் தியாகத்திற்கு அதிகமாக ஆதரவளிக்காதீர்கள். நான் எனது வீட்டையோ எதையும் இழக்கவில்லை.
உண்மையில் ராக்கெட்ரியில் ஈடுபட்டுள்ள அனைவரும் மிகவும் பெருமையுடன் இந்த ஆண்டு அதிக வருமான வரி செலுத்துவார்கள். ஏனெனில் நாங்கள் அனைவரும் நல்ல லாபம் ஈட்டினோம். நான் இன்னும் என் வீட்டை நேசித்து அங்கு தான் வாழ்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Oh Yaar. Pls don’t over patronize my sacrifice. I did not lose my house or anything. In fact all involved in Rocketry will be very proudly paying heavy Income Tax this year. Gods grace 😃😃🙏🙏🇮🇳🇮🇳🇮🇳We all made very good and proud profits. I still love and live in my house .🚀❤️ https://t.co/5L0h4iBert
— Ranganathan Madhavan (@ActorMadhavan) August 17, 2022