தன்னை கடித்த பாம்பை கடித்து துப்பிய 2 வயது சிறுமி!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அங்கரா : துருக்கியில், தன்னை கடித்த பாம்பை 2 வயது சிறுமி கடித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்காசிய நாடான துருக்கியின் பிங்கோல் அருகே கண்டூர் என்ற கிராமத்தில் வசிக்கும் 2 வயது சிறுமி, வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது ஒரு பாம்பு அவளது உதட்டை கடித்தது. பதிலுக்கு சிறுமியும் அந்தப் பாம்பை பிடித்து கடிக்கத் துவங்கினாள். அந்தப் பாம்பு சிறுமியிடம் இருந்து தப்பிக்க போராடியது. ஆனால், அவள் விடவில்லை. அந்தப் பாம்பை மடக்கிப் பிடித்து கடித்து துப்பி விட்டாள். பாம்பு அதே இடத்தில் உயிரிழந்தது.

latest tamil news

சற்று நேரத்தில் வீட்டின் பின்பக்கம் வந்த குடும்பத்தினர், சிறுமி வாயில் ரத்தத்துடனும், அருகில் பாம்பு இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.உடனே மருத்துவமனைக்கு சிறுமியை துாக்கிச் சென்றனர். அங்கு, அந்தச் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிறுமியை கடித்த பாம்பு விஷமற்றது என்பதால், உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.