தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது.
இதுவரை 33 சிறப்பு முகாம்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 34ஆவது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் எதிர்வரும் 21 ஆம் திகதி தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
முதல் தவணை, 2ஆவது தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி போடாத 1.50 கோடி பேருக்கு இந்த சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.