‘ஆக்ஷன் ஸ்டார்’ ஆதித்யா தீபாவளிக்கு தனது கருடா படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யவிருக்கிறார். இந்த படம் நடிகரின் ரசிகர்கள் காரணமாக பைசா வசூலாகிவிடும் என உறுதியாகிறது. மெகா ஹிட் ஆகி பெட்டிகள் நிரம்பி தயாரிப்பாளர்களுக்கு பணம் புரளும் என இந்த படம் உறுதியளிக்கிறது. ஆனால், அதில் ஒரு தடங்கல் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் என்ற திரைப்பட பைரஸி கும்பல் படம் திரையரங்குக்கு வருவதற்குள் ஆன்லைனில் வெளியிடுவோம் என்று மிரட்டுகிறது.
மேற்குறிப்பிட்ட வரிகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் தமிழ்ராக்கர்ஸ் என்ற புதிய வெப் சீரிஸ் உடன் பொருந்துகிறது. ஆனால், திரையில் வரும் இந்த காட்சி, 2018 ஆம் ஆண்டில் ஒரு தமிழ் திரைப்பட ஸ்டார் நடிகரின் பெரிய படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக நடந்த நிஜ சம்பவ காட்சிகளுடன் நெருக்கமாக உள்ளது.
யார் இந்த தமிழ்ராக்கர்ஸ்?
தமிழ்ராக்கர்ஸ் ஒரு பைரஸி வலைத்தளம், அதே பெயரில் அறியப்பட்ட ஒரு குழுவால் நடத்தப்பட்டது. ஆனால், அந்த குழு எப்படி உருவானாது என பெரியதாக அறியப்படவில்லை. ஆனால், சில செய்திகள் நம்பும்படியாக உள்ளது. அவர்களின் இருத்தல் 2011-இல் இருந்து வருகிறது. பைரேட் பே போன்ற டொரண்ட் தளங்கள் பைரஸி உள்ளடக்கத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கான தளங்களாக இருந்த காலம் அது.
ஆரம்பத்தில், இந்த குழு தமிழ் படங்களை மட்டுமே தங்கள் இணையதளத்தில் பதிவேற்றும் என்பதால் அவர்கள் பெரிய அளவில் அறியப்படவில்லை. பிற பிராந்திய மொழிகளில் இருந்து பைரசி உள்ளடக்கத்தை திருட்டுத்தனமாக வெளியிடும் அளவிற்கு வளர்ந்தபோதுதான் அவர்களின் பிரபல்யம் அதிகரித்தது.
இந்த குழுவின் அளவு இன்னும் ஒரு மர்மமாகவே உள்ளது. இருப்பினும், அவர்களின் செயல்பாட்டின் அளவு அவர்கள் இந்தியாவுக்கு வெளியேயும் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
இந்த ஆபத்தை போலீசார் எப்படி சமாளித்தார்கள்?
மார்ச் 2008 இல், பைரசி குற்றச்சாட்டின் பேரில் தமிழ்ராக்கர்ஸுடன் தொடர்புடையதாகக் கூறப்பட்ட 3 பேரை கேரள காவல்துறை கைது செய்தது. தமிழ்ராக்கர்ஸின் மூளை எனக் கூறப்படும் கார்த்தி, விழுப்புரத்தில் அவரது உதவியாளர்களான பிரபு மற்றும் சுரேஷ் ஆகியோருடன் கைது செய்யப்பட்டார்.
திரைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே சட்டவிரோத டொரண்ட் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் அளித்த பல புகார்களின் அடிப்படையில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மோகன்லாலின் வெற்றிப் படமான புலிமுருகனை ஆன்லைனில் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த குழு, பிரணவ் மோகன்லாலின் முதல் படமான ஆதியை லீக் செய்ததற்குப் பின்னால் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு ஊடக செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் செய்த வங்கி பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சட்டவிரோத வணிகத்தின் மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பாதித்திருக்க வேண்டும் என்று தெரியவந்தது.
அதன் பிறகு தமிழ்ராக்கர்ஸ்க்கு என்ன ஆனது?
செய்திகள் நம்பும்படியாக இருந்தால், இப்போது அந்த தளம் செயலிழந்துவிட்டது. அவை 2020 இல் செயல்படுவதை நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. மற்றொரு பைரசி இணையதளமான தமிழ் எம்வியின் செய்தி: பத்தாண்டு கால தமிழ் ராக்கர்ஸின் அற்புதமான சேவைகளுக்கு நன்றி! – TMV குழுவிலிருந்து [இந்த தளம் அவர்களால் மூடப்பட்டது அதற்கு மேல் ஒன்றுமில்லை] என்று குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இந்த தளத்தைப் போன்ற வேறு தளங்கள் மற்றும் அதே போன்ற தளங்கள் இன்னும் உள்ளன. சமீபத்திய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியான சில நாட்களிலேயே இணையத்தில் லீக் ஆவது வாடிக்கையாக உள்ளது.
பொழுதுபோக்குத் துறையில் பைரஸி எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
தொற்றுநோய் பலரும் சட்டவிரோத பைரஸி தளங்களை நோக்கி செல்வதைத் துரிதப்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிடிஎன் (CDN) மற்றும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான அகமை தொழில்நுட்பங்கள் மற்றும் முசோ (Akamai Technologies and MUSO) ஆகியவை இணைந்து வெளியிட்ட 2021 கூட்டு அறிக்கையின்படி, உலகளாவிய பைரஸியை அளவிடும் தரவு நிறுவனமான முசோ ஜனவரி 2021 முதல் செப்டம்பர் 2021 வரை பைரஸி உள்ளடக்கத்திற்கான உலகளாவிய தேவை உயர்ந்துள்ளது.
பைரஸி வலைத்தளங்களில் இந்தியா மட்டும் 6.5 பில்லியன் வருகைகளைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா (13.5 பில்லியன்), ரஷ்யா (7.2 பில்லியன்) அடுத்து மூன்றாவது மிக அதிகமான பயனர்களின் வருகைப் பதிவை இந்தியா பெற்றுள்ளது. “ஸ்டேட் ஆஃப் தி இன்டர்நெட்” என்ற தலைப்பிலான அறிக்கை, 67 பில்லியனுக்கும் அதிகமான டிவி உள்ளடக்க பைரஸி வருகைகள் இருப்பதையும் வெளிப்படுத்தியத. இது அனைத்து பைரஸி டிராஃபிக்கில் தோராயமாக 50% ஆகும். வெளியீட்டு வகை 30 பில்லியன் வருகைகளுடன் (23%) இரண்டாவது இடத்தில் உள்ளது. 14.5 பில்லியன் (11%) மற்றும் இசை 10.8 பில்லியனுடன் (8%) உள்ளது. மென்பொருள் திருட்டு 9 பில்லியன் வருகைகளுடன் (7%) நெருக்கமாக உள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட டிஜிட்டல் டிவி ரிசர்ச்சின் மற்றொரு அறிக்கை, இந்தியாவில் உள்ள மிக உயர்ந்த மீடியா சேவை வழங்குநர்களுக்கு இந்த ஆண்டு 3.08 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணித்துள்ளது. ஆன்லைன் ஸ்ட்ரீமிங் பைரஸிக்கான உலகளாவிய செலவு இந்த ஆண்டு 52 பில்லியன் டாலர்களை எட்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இருப்பினும், தி பைரேட் பே போன்ற டொரண்ட் தளங்கள், பராமரிப்பு மற்றும் சர்வர் செலவுகளுக்குப் பிறகு அதிக பணம் சம்பாதிக்கவில்லை என்று கூறுகின்றன. அந்த தளத்தின் செய்தித் தொடர்பாளர், அவர்கள் நஷ்டத்தில் இயங்குகிறார்கள் என்று சொல்லும் அளவிற்குச் சென்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”