துபாயில் வேலை செய்துவரும் இந்தியருக்கு லொட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.
முதல்முறையாக துபாயின் மஹ்சூஸ் லொட்டரி வரலாற்றில் ஒரே எண்ணில் இரண்டு பேருக்கு பரிசு விழுந்துள்ளது.
இந்திய மற்றும் பிலிப்பைன்ஸ் வெளிநாட்டவர்கள் இருவர் ரூ.21 கோடிக்கு மேல் பரிசு விழுந்த லொட்டரியை பகிர்ந்து கொள்கின்றனர்.
துபாயில் சனிக்கிழமை 88-வது வாராந்திர டிராவில், இரண்டு வெற்றியாளர்கள் – ஒரு இந்தியர் மற்றும் ஒரு பிலிப்பைன்ஸ் முதல் பரிசான 10 மில்லியன் திர்ஹாம்கள்(ரூ. 21,68,13,056) வென்றனர். அதாவது ஒவ்வொருவரும் 5 மில்லியன் திர்ஹாம்கள் (ரூ. 10,84,06,528) பெற்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஷானவாஸ் மற்றும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த நெல்சன் ஆகியோர் ஐந்து எண்களையும் (7,9,17,19,21) பொருத்தி பரிசைத் தட்டிச் சென்றனர்.
Photo: The National News
41 வயதான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) சார்ந்த இந்திய வெளிநாட்டவர் ஷானவாஸ், இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர், துபாயின் அல் குவோஸில் உள்ள ஒரு கார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 14 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
பெருந்தொகையை வென்ற பிறகும், ஷாநவாஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடர்ந்து பணியாற்ற விரும்புகிறார், ஏனெனில் அந்நாடு அவருக்கு கனவு காணும் திறனைக் கொடுத்துள்ளது என்றும், மேலும் மஹ்சூஸை வெல்வதன் மூலம் அவரது கனவுகளை நிறைவேற்ற முடியும்என்று கூறியுள்ளார்.
“நான் முதலில் வென்ற பணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள எனது கடன் மற்றும் பிற கடன்களை செலுத்துவதற்கும் சொத்து பராமரிப்புக்கும் பயன்படுத்துவேன். நான் இந்தியாவை விட ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதலீடு செய்ய விரும்புகிறேன்,” என்று ஷனவாஸ் கூறினார்.
For the first time in Mahzooz’s history, two winners shared the top prize of AED 10,000,000. Congratulations to Nelson & Shanavas for winning AED 5,000,000 each! Visit https://t.co/1cNLERv9M1 now and participate in the upcoming draw to be one among the lucky winners.
*T&Cs apply pic.twitter.com/LC4zECKLdZ— Mahzooz (@MyMahzooz) August 17, 2022
மற்றொரு வெற்றியாளரான பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 44 வயதான நெல்சன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள wet wipes நிறுவனத்தில் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிகிறார்.
நெல்சன் ஜூன் 2021-ல் Mahzooz-ல் பங்கேற்கத் தொடங்கினார். அவர் இந்த பணத்தைப் பயன்படுத்தி தனது குடும்பத்திற்கு ஒரு கனவு வீட்டைக் கட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.