தேனிலவுக்குச் சென்ற புதுமணத் தம்பதியர்… நீச்சல் குளத்தில் நேர்ந்த பயங்கர விபத்து


பிரித்தானிய தம்பதியர் தங்கள் தேனிலவுக்காக கரீபியன் தீவு ஒன்றிற்குச் சென்றுள்ளார்கள்.

அவர்கள் நீச்சல் குளம் ஒன்றில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தபோது நீச்சல் குளத்தின் சுவர்கள் உடைந்ததால் படுகாயம் அடைந்துள்ளார் அந்த புதுமணப்பெண்.

பிரித்தானியாவைச் சேர்ந்த புதுமணத்தம்பதியர் தேனிலவுக்காக கரீபியன் தீவுகளுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்கள் சந்தித்த விபத்தொன்று அந்த நாளை எதிர்மறையான வகையில் மறக்கமுடியாத நாளாக மாற்றிவிட்டது.

லண்டனைச் சேர்ந்த Jelizaveta மற்றும் Gavin Jones தம்பதியர் தங்கள் தேனிலவுக்காக கரீபியன் தீவுகளுக்குச் சென்றுள்ளார்கள்.

தம்பதியர், Sandals Royal Curaçao என்னும் ஐந்து நட்சத்திர ஹொட்டலில் தங்கியிருந்த நிலையில், அங்கிருந்த கடலை நோக்கிய, கடலை ஒட்டிய நீச்சல் குளத்தில் சுமார் 20 பேர் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

தேனிலவுக்குச் சென்ற புதுமணத் தம்பதியர்... நீச்சல் குளத்தில் நேர்ந்த பயங்கர விபத்து | Newlyweds On Honeymoon

Credit: Instagram  

அப்போது, திடீரென நீச்சல் குளத்தின் சுவர்கள் உடைய, நீச்சல் குளத்தில் நேரம் செலவிட்டுக்கொண்டிருந்தவர்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.

பலருக்குக் காயங்கள் ஏற்பட, காயம்பட்டவர்களில் புதுமணப்பெண்ணான Jelizavetaவும் ஒருவர். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அவர் தடுமாறி தண்ணீரிலிருந்து எழ முயன்றபோது, தன் தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார். அவரது கணவருக்கும் தலையில் அடிபட்டுள்ளது.

தேனிலவுக்குச் சென்ற புதுமணத் தம்பதியர்... நீச்சல் குளத்தில் நேர்ந்த பயங்கர விபத்து | Newlyweds On Honeymoon

image – google

மொத்தம் 12 பேர் வரை காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். Jelizavetaவுக்கு காயம் ஆழம் என்பதால் தையல் போடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த கரீபியன் ரிசார்ட் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், Jelizaveta மற்றும் Gavin தம்பதியரைப் பொருத்தவரை, அவர்களுக்கு அந்த தேனிலவுப் பயணம் மோசமான ஒரு அனுபவமாக அமைந்துவிட்டது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.