வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 5ஜி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான கடிதத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்த சேவையை அமல்படுத்த தயாராகும்படி அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த மாதம் 5ஜி ஒதுக்கீட்டிற்கான ஏலம் நடந்தது. அதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடோபோன், அதானி நிறுவனம் ஆகியவை பங்கேற்றன. அதன் மூலம் அரசுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. 5ஜியின் ஆரம்ப கட்ட சேவை வரும் செப்., – அக்., மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் நாட்டின் முக்கிய நகரங்களில் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
2ஜி,3ஜி, 4ஜியை விட அதிகவேகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள 5ஜி மூலம் அதிகளவு தகவல்களை, குறைந்த நேரத்தில், வேகமாக அனுப்ப முடியும். சுரங்கம், கிடங்கு மற்றும் டெலிமெடிசன் ஆகிய துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி 5ஜி, செமிகண்க்டர் உற்பத்தி மற்றும் ஆப்டிகல் பைபர் கேபிள் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலம் நாட்டின் அடிமட்டங்களில் இருந்து புரட்சி ஏற்படும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில், 5ஜி ஒதுக்கீட்டிற்கான கடிதங்கள் வழங்கப்பட்டு விட்டன. இந்த சேவையை அறிமுகப்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தயாராக வேண்டும் எனக்கூறியுள்ளார்.
5ஜி ஒதுக்கீடு மூலம், இந்த சேவையை அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த சேவை அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement