பாஜகவுடனான கூட்டணி ஆட்சியை முறித்துக்கொண்டு தேஜஸ்வி யாதவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருள் ஆனது. பல்வேறு அரசியல் தலைவர்கள் நிதிஷ் குமாரை பாராட்டினார்கள். நிதிஷ் குமாரின் இந்த துணிச்சலான முடிவு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரும் துணை முதல்வராக தேஜஸ்வி யாதவும் பதவி ஏற்றனர். இது பீகார் மட்டுமின்றி பல மாநில அரசியல் பிரமுகர்களை ஆச்சர்ய படவைத்தது.
நிதிஸ் குமார் பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி வைத்து சமீபத்தில் ஆட்சியமைத்தது. முதலமைச்சராக நிதீஷ் குமாரும் துணை முதலமைச்சராக தேஜஸ்வியும் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கமும் செய்யப்பட்டது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி, ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் தொடர்ச்சியாக வாய்வு வழங்கப்படும் நிலையில் என்னை போன்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை என பகிரங்கமாக தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இத்தகைய குற்றச்சாட்டுக்கு இன்றைய தினம் பதில் அளித்துள்ள பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி கூறிய கருத்து தனக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் அவையில் இடம் வழங்க முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் .
அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் சட்டமன்ற உறுப்பினர் பீமா பாரதி பேசியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ள நிதிஷ்குமார் இத்தகைய தவறான செயல்பாடுகள் குறித்து பேசி முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.